பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் செல்லும் மனுதாரர்களிடம்... ஐந்து கேள்வி கேக்குறாங்க!மக்களின் நன்மதிப்பை கணக்கிட சுயசோதனை

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி சரகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்காக, கருத்து கேட்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் வழங்கும் படிவத்திலுள்ள ஐந்து கேள்விக்கு சரியான பதிலை பூர்த்தி செய்து, பெட்டிக்குள் இட வேண்டும்.கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், புகார் தெரிவிக்க பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்,
 போலீஸ் ஸ்டேஷன் செல்லும் மனுதாரர்களிடம்... ஐந்து கேள்வி கேக்குறாங்க!மக்களின் நன்மதிப்பை கணக்கிட சுயசோதனை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சரகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்காக, கருத்து கேட்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் வழங்கும் படிவத்திலுள்ள ஐந்து கேள்விக்கு சரியான பதிலை பூர்த்தி செய்து, பெட்டிக்குள் இட வேண்டும்.கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், புகார் தெரிவிக்க பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பொதுமக்களிடம் போலீசார் நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவை அறிந்து கொள்ளும் வகையில், கருத்து கேட்பு பெட்டி வைக்க, கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில், பொள்ளாச்சி பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், கருத்து கேட்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.கருத்து கேட்புபோலீஸ் ஸ்டேஷன்களுக்கு வரும் மக்கள், போலீசாரின் அணுகுமுறை குறித்து தெரிவிக்க, கருத்து கேட்பு பெட்டி வைக்கப்படுகிறது. இதற்காக, பொதுமக்களிடம் விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது.அதில், போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளிக்கும் போது, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் நடந்து கொள்ளும் விதம் தங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? புகார் அளிக்கும் போது மனுவை பெற்றுக் கொண்டதற்கான பதிலறிக்கை (சி.எஸ்.ஆர்.,) ஏதும் வழங்கப்படுகிறதா?மனு விசாரணைக்கான அழைப்பாணை கொடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தார்களா, விசாரணை செய்யும் போது மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர், இரு தரப்பினரையும் வைத்து விசாரணை செய்யப்பட்டதா, மனு விசாரணையின் முடிவு தங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறதா, என, ஐந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.அதில், பொதுமக்கள், ஆம், இல்லை என இரண்டில் ஒன்றை பதிலாக அளிக்கும் வகையில், 'சாய்ஸ்' வழங்கப்பட்டுள்ளது. புகார் தாரர் பெயர், மொபைல்போன் எண்ணுடன் பூர்த்தி செய்து, அந்த விண்ணப்ப படிவத்தை, பெட்டிக்குள் இட வேண்டும்.பாராட்டு சான்றுபோலீசார் கூறியதாவது:மாவட்ட எஸ்.பி., அனைத்து உட்கோட்ட அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் அலுவலகங்களில் இயங்க கூடிய, 'ஸ்பெஷல் யூனிட்' அலுவலகங்களில் நுழைவுவாயிலில், 'பீட் பேக் பாக்ஸ்' வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பொள்ளாச்சி பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், 'பாக்ஸ்' அமைக்கப்படுகிறது. எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து பெறப்படும் படிவம், பொதுமக்களுக்கு வழங்கப்படும்.மக்கள் கருத்து கேட்பு பெட்டியில் இடும் படிவங்களை தொகுத்து, டி.எஸ்.பி., அலுவலகத்தில் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதம் இறுதியிலும் படிவங்களை சேகரித்து, டி.எஸ்.பி.,யின் தனி அறிக்கையுடன் மாவட்ட எஸ்.பி.,க்கு அனுப்ப வேண்டும்.கருத்துக்கள் குறித்தான படிவம், நிலைய வரவேற்பாளர், நிலைய எழுத்தர் வசம் இருக்க வேண்டும். இந்த படிவத்தை மக்களிடம் வழங்க வேண்டும். மக்களின் நன்மதிப்பை பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றம் போலீசாருக்கு, பாராட்டு சான்றிதழை எஸ்.பி., வழங்குவார்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-202116:49:38 IST Report Abuse
Ram Pollachi இருக்கிற வேலையை பார்க்கவே நேரம் இல்லை இதில் இது வேற. பேசாமல் ஒரு உண்டியலை வைத்துவிடுங்கள் அலைச்சல் மிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X