பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி பருத்தி சாகுபடிக்கு ஆர்வம் : மழையில்லாததால் சோகம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
உடுமலை;மானாவாரியாக பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், போதிய மழை பெய்யாததால், கவலையில் உள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., பாசனப்பகுதி நான்கு மண்டலமாக விரிவுபடுத்தும் முன்பு, பருத்தி பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது.பாசன நாட்கள் குறைப்பு, நோய்த்தாக்குதல், நிலையில்லாத விலை உட்பட காரணங்களால், பருத்தி சாகுபடியே இல்லாத நிலை உருவானது. கடந்த, 2009ம் ஆண்டு

உடுமலை;மானாவாரியாக பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், போதிய மழை பெய்யாததால், கவலையில் உள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., பாசனப்பகுதி நான்கு மண்டலமாக விரிவுபடுத்தும் முன்பு, பருத்தி பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது.பாசன நாட்கள் குறைப்பு, நோய்த்தாக்குதல், நிலையில்லாத விலை உட்பட காரணங்களால், பருத்தி சாகுபடியே இல்லாத நிலை உருவானது. கடந்த, 2009ம் ஆண்டு முதல், வீரிய ஒட்டு ரக விதைகள் வருகை, சில மானியத்திட்டங்களால், பி.ஏ.பி., இரண்டாம், நான்காம் மண்டல பாசனத்துக்கு, பரவலாக, ஆடிப்பட்டத்தில், பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நடப்பாண்டு, பாசனத்துக்கு, மக்காச்சோளமே அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வடகிழக்கு பருவமழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், மானாவாரியாக, விருகல்பட்டி உட்பட பல பகுதிகளில், பருத்தி சாகுபடி செய்துள்ளனர். வழக்கமாக, ஆடிப்பட்டத்தில், விதைப்புக்கு பிறகு, மழை பெய்யும்.நடப்பாண்டு, இதுவரை, செடிகளுக்கு தேவையான ஈரம் கிடைக்கும் அளவுக்கு, மழை பெய்யவில்லை. இதனால், செடிகள் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக, வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், தீவிர மழை பெய்யவில்லை. இதனால், மானாவாரியாக பருத்தி நடவு செய்துள்ள விவசாயிகள், கவலையில் உள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'பருத்தி சாகுபடியில், அறிமுகப்படுத்தப்படும், விதை ரகங்கள், புதிய தொழில்நுட்பங்களை விளைநிலங்களில், செயல்படுத்தும் அளவுக்கு, வேளாண்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை. இதனால், தனியாரிடம் ஆலோசனைகள் பெற்று, சாகுபடி மேற்கொள்ளும் போது, பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம்,' என்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X