பொது செய்தி

தமிழ்நாடு

மல்லிகை விலை உயர்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை நகரில், நேற்று, மல்லிகைப்பூ, கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, உடுமலை நகரில், பலரது வீடுகளும், சுத்தப்படுத்தப்பட்டும், மாவிலை தோரணங்களால் அலங்கரித்தும் காணப்படுகிறது. வீட்டில் உள்ள பூஜை அறையில் கிருஷ்ணர் சிலைகள் வைத்து, பூ மாலைகளால் அலங்காரமிட்டுள்ளனர்.சிலர், கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளான

உடுமலை:உடுமலை நகரில், நேற்று, மல்லிகைப்பூ, கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, உடுமலை நகரில், பலரது வீடுகளும், சுத்தப்படுத்தப்பட்டும், மாவிலை தோரணங்களால் அலங்கரித்தும் காணப்படுகிறது. வீட்டில் உள்ள பூஜை அறையில் கிருஷ்ணர் சிலைகள் வைத்து, பூ மாலைகளால் அலங்காரமிட்டுள்ளனர்.சிலர், கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளான சீடை, முறுக்கு, லட்டு, தயிர், வெண்ணெய், அவல் உள்ளிட்டவற்றை படையலிட்டு பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இதனால், நேற்று, முக்கிய கடை வீதிகளில், சிலைகள் மற்றும் பூஜைப்பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். அதேநேரம், மல்லியின் விலை, கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X