பள்ளி துாய்மை பணி; நிதி ஆதாரமில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி துாய்மை பணி; நிதி ஆதாரமில்லை

Added : ஆக 30, 2021
Share
பொள்ளாச்சி:வரும், செப்.,1ம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகங்கள் சுத்தப்படுத்தும் பணி, நிதி ஆதாரம் இல்லாமல், தாமதமாகியுள்ளது.நெகமம், கிணத்துக்கடவு, சேரிபாளையம், வடசித்துார், முத்துக்கவுண்டனுார் மற்றும் காளியண்ணன்புதுார் பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. வரும், 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல், 12ம் வகுப்புகள் வரை செயல்பட அரசு

பொள்ளாச்சி:வரும், செப்.,1ம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகங்கள் சுத்தப்படுத்தும் பணி, நிதி ஆதாரம் இல்லாமல், தாமதமாகியுள்ளது.நெகமம், கிணத்துக்கடவு, சேரிபாளையம், வடசித்துார், முத்துக்கவுண்டனுார் மற்றும் காளியண்ணன்புதுார் பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. வரும், 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல், 12ம் வகுப்புகள் வரை செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.மாணவர்கள் வருகையின் போது, வகுப்பறைகள், பள்ளி வளாகம் சுத்தமாக இருக்க வேண்டும். மாணவ, மாணவியர் அமரும் இருக்கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். வகுப்பறைக்குள் வரும் மாணவர்களின் கைகளில் சானிடைசர் தெளிக்க வேண்டும்.வகுப்பறைக்குள் இடைவெளி விட்டு அமர வேண்டும் என்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில், வகுப்பறைகள் பெரும்பாலும் சுத்தப்படுத்தப்பட்டு, துாய்மையாக உள்ளன. வடசித்துார், நெகமம் மற்றும் முத்துக்கவுண்டனுார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், களைச்செடிகள், முட்செடிகள் அகற்றப்படாமல் உள்ளன.பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, வகுப்பறைகள், பள்ளி வளாகம் மற்றும் பொதுக்கழிப்பிடங்களை சுத்தம் செய்து பராமரிக்க, நிதி கிடைப்பதில்லை.விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் பயன்படுத்தாத காரணத்தால், புதர் மண்டிக்கிடக்கிறது. இரண்டு முதல், மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்த ஆட்கள் கிடைப்பதில்லை, என்றனர்.பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் கூறுகையில், 'எங்கள் மாணவர்கள், எங்களது பள்ளி என்ற காரணத்துக்காக, அரசின் நிதியை எதிர்பார்க்காமல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து தருவதை கடமையாக கொண்டுள்ளோம்,' என்றனர்.நகராட்சியில் சிக்கல் இல்லைதமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் கல்வி பாதிக்காமல் இருக்க, 'ஆன்லைன்' வாயிலாக கற்பிக்கப்படுகிறது.நடப்பாண்டு கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, செப்., 1ம் தேதி பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் துாய்மை பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர். வகுப்பறைகள் துாய்மை, கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X