பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி சுற்றுச்சுவர் சேதம் நகராட்சி சீரமைக்குமா?

Added : ஆக 30, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை, யு.எஸ்.எஸ்., காலனியில், நகராட்சி துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. தற்போது, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுவதால், மாணவர்கள் எவரும் பள்ளிக்கு வருகை புரிவதில்லை. அதேநேரம், தினமும், ஆசிரியர்கள், பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.முக்கிய வீதியை ஒட்டியுள்ள இப்பள்ளியின் சுற்றுச்சுவர் சேதடைந்துள்ளது. ஒரு பகுதியில், சுற்றுச்சுவர் முழுமையாக இல்லாமல்

உடுமலை:உடுமலை, யு.எஸ்.எஸ்., காலனியில், நகராட்சி துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. தற்போது, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுவதால், மாணவர்கள் எவரும் பள்ளிக்கு வருகை புரிவதில்லை. அதேநேரம், தினமும், ஆசிரியர்கள், பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.முக்கிய வீதியை ஒட்டியுள்ள இப்பள்ளியின் சுற்றுச்சுவர் சேதடைந்துள்ளது. ஒரு பகுதியில், சுற்றுச்சுவர் முழுமையாக இல்லாமல் உள்ளது.இதனால், இரவு நேரங்களில், பள்ளி வளாகத்திற்குள் புகும் சில விஷமிகள், மது அருந்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மாணவர் வருகை தராத போதும், பள்ளி வளாகத்தை பராமரிக்க வேண்டும். இரவு நேரத்தில் அத்துமீறுவோரை, கண்டறிந்து தடுக்க முடியவில்லை. பள்ளி வளாகத்தை பாதுகாக்க, சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும். இதற்கு, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X