பொது செய்தி

தமிழ்நாடு

கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்: மத்திய அமைச்சருக்கு கடிதம்

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பொள்ளாச்சி:'கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, எம்.பி., கடிதம் அனுப்பியுள்ளார்.பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில், மீட்டர் கேஜ் காலத்தில் கோவை - ராமேஸ்வரம் இரவு

பொள்ளாச்சி:'கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, எம்.பி., கடிதம் அனுப்பியுள்ளார்.பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில், மீட்டர் கேஜ் காலத்தில் கோவை - ராமேஸ்வரம் இரவு எக்ஸ்பிரஸ், கோவை -- மதுரை இன்டர் சிட்டி, துாத்துக்குடி பாஸ்ட் பாசஞ்சர், கோவை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்களால் லட்சக்கணக்கானோர் பயனடைந்தனர்.இந்த வழித்தடம், 900 கோடி ரூபாய் செலவில் அகல ரயில் பாதையாக மேம்பாட்டுக்கு பின், கோவை - பொள்ளாச்சி வழியே கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கூட இயக்கப்படவில்லை.இதனால், மக்கள் ரயில் வசதியை இழப்பதுடன், ரயில்வே துறையும் வருவாயை இழந்துள்ளது. குறிப்பாக, பார்சல் வாயிலாக பெறப்படும் வருவாய், 60 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கினால், அதிக மக்கள் பலனடவர். ரயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-202116:41:18 IST Report Abuse
Ram Pollachi பொள்ளாச்சி இரயில் நிலையத்தை மதுரை கோட்டத்துடன் இணைத்தால் எல்லாம் சரியாகிவிடும். எல்லை வித்தியாசம் வெறும் ஐநூறு மீட்டர்.
Rate this:
Cancel
30-ஆக-202116:41:25 IST Report Abuse
Ram Pollachi பொள்ளாச்சி இரயில் நிலையத்தை மதுரை கோட்டத்துடன் இணைத்தால் எல்லாம் சரியாகிவிடும். எல்லை வித்தியாசம் வெறும் ஐநூறு மீட்டர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X