சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்: மிரட்டல் விடுத்தவர் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வால்பாறை, முடீஸ் பகுதியை சேர்ந்த பிரசியா என்பவர், சர்ச் பஸ் ஸ்டாப் அருகே நடந்து செல்லும் போது, அங்கு குடிபோதையில் நின்றிருந்த கல்லார் எஸ்டேட்டை சேர்ந்த ராஜேஸ்குமார், 26. என்பவர், வாக்குவாதம் செய்துள்ளார்.மேலும், பிரசியாவை தாக்கி, மிரட்டல் விடுத்தார். அங்கிருந்த, துரைராஜ் என்பவர், சமரசம் செய்த போது, அவரையும் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து, துரைராஜ் கொடுத்த

வால்பாறை, முடீஸ் பகுதியை சேர்ந்த பிரசியா என்பவர், சர்ச் பஸ் ஸ்டாப் அருகே நடந்து செல்லும் போது, அங்கு குடிபோதையில் நின்றிருந்த கல்லார் எஸ்டேட்டை சேர்ந்த ராஜேஸ்குமார், 26. என்பவர், வாக்குவாதம் செய்துள்ளார்.மேலும், பிரசியாவை தாக்கி, மிரட்டல் விடுத்தார். அங்கிருந்த, துரைராஜ் என்பவர், சமரசம் செய்த போது, அவரையும் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து, துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில், முடீஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன், வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்குமாரை கைது செய்தார்.புகையிலை விற்றவர் கைதுகிணத்துக்கடவில், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக, கொண்டம்பட்டி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவை - பொள்ளாச்சி ரோடு பகுதிகளில் செயல்படும் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில், போலீசார் சோதனை மேற்கொண்டனர்.இதில், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டு, புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெட்டிக்கடை உரிமையாளர் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
வடமாநில வாலிபர் தற்கொலை

மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் வசிப்பவர் ராம். நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர், கடந்த, 25 ஆண்டுகளாக மடத்துக்குளம் பகுதியில் வசித்து வருகிறார்.இவருடைய மகன் தனுஷ்க்கு, 19, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் வீட்டில் துாக்கிட்டு தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, கணியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X