பொது செய்தி

தமிழ்நாடு

4,000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில், செப்., 1ம் தேதி முதல், 210 பள்ளிகள் திறக்கப்படுகிறது.நீலகிரியில், கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், செப்., 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.முதற்கட்டமாக, 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நீலகிரியில், குன்னுார், கூடலுார் கல்வி மாவட்டத்தில், 210 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.பள்ளி

ஊட்டி:நீலகிரியில், செப்., 1ம் தேதி முதல், 210 பள்ளிகள் திறக்கப்படுகிறது.நீலகிரியில், கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், செப்., 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.முதற்கட்டமாக, 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நீலகிரியில், குன்னுார், கூடலுார் கல்வி மாவட்டத்தில், 210 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.பள்ளி திறப்பையொட்டி அந்தந்த பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் தலைமையில் பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கும் நோக்கில், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை உடல் வெப்பநிலை பரிசோதித்தும், சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமரவைத்து பாடங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன் கூறுகையில்,''நீலகிரியில் குன்னுார், கூடலூர் கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, 210 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு மாணவர்களை வரவேற்க தயாராக உள்ளது. 4,000 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு, 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X