சாலையில் கவிழ்ந்த ஜல்லி லாரி: கடும் போக்குவரத்து நெரிசல்| Dinamalar

சாலையில் கவிழ்ந்த ஜல்லி லாரி: கடும் போக்குவரத்து நெரிசல்

Added : ஆக 30, 2021
Share
குன்னுார்:குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில், 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேட்டுப்பாளையத்தில் இருந்து ஜல்லிகளை ஏற்றி கொண்டு, ஊட்டி நோக்கி நேற்று டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் மணியாபுரத்தை சேர்ந்த டிரைவர் ராஜூ ,46, ஓட்டிவந்தார். குன்னுார் பர்லியார் அருகே, பகல், 12:30 மணியளவில் வந்த போது
 சாலையில் கவிழ்ந்த ஜல்லி லாரி: கடும் போக்குவரத்து நெரிசல்

குன்னுார்:குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில், 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேட்டுப்பாளையத்தில் இருந்து ஜல்லிகளை ஏற்றி கொண்டு, ஊட்டி நோக்கி நேற்று டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் மணியாபுரத்தை சேர்ந்த டிரைவர் ராஜூ ,46, ஓட்டிவந்தார். குன்னுார் பர்லியார் அருகே, பகல், 12:30 மணியளவில் வந்த போது சாலையில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுனர் ராஜூ காயமின்றி தப்பினார். சாலை முழுவதும் ஜல்லிகள் சிதறியது. இதனால், வாகன போக்குவரத்து பாதித்தது.தகவலின் பேரில், போலீசார், வருவாய்துறையினர், நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை மேற்கொண்டு பொக்லைன் உதவியுடன் ஜல்லிகற்களை அப்புறப்படுத்தி, லாரியை அங்கிருந்து அகற்றினர்.இதனால், நேற்று மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட சமவெளி பகுதி களுக்கு செல்லும் அரசு பஸ்கள், வாகனங்கள் குன்னுார் லெவல் கிராசிங்கில் இருந்து மாற்றி, கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டது. மாலை, 3.30 மணியளவில் சீரானதும் வாகனங்கள் பர்லியார் வழியாக சென்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X