பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: விண்ணப்பிக்க செப்.15 கடைசி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வேலுார்: கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு செப்., 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி வேலுார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருக்குண அய்யப்பதுரை தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வேலுார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2021- 22 ம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணபங்களை www.tncu.tn.gov.in என்ற

வேலுார்: கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு செப்., 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி வேலுார் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருக்குண அய்யப்பதுரை தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வேலுார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2021- 22 ம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணபங்களை www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
கூட்டுறவு மேலாண்மை கணினி, நகை மதிப்பீடு குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும். பயற்சி பெற்ற பின் இதற்காக 3 சான்றிதழ் அளிக்கப்படும். செப்., 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபால் அல்லது கொரியர் மூலம், முதல்வர், வேலுார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 9வது கிழக்கு குறுஞ்சாலை, காட்பாடி, வேலுார்- 632006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X