பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை இல்லா ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கலவை: கலவை அருகே, குழந்தை இல்லா ஏக்கத்தில் தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே ஆரூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 27. கூலித்தொழிலாளி. இவர் மனைவி வந்தனா, 24. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.நேற்று இரவு 8:00 மணிக்கு குடித்து விட்டு வெங்கடேசன் வீட்டுக்கு

கலவை: கலவை அருகே, குழந்தை இல்லா ஏக்கத்தில் தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே ஆரூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 27. கூலித்தொழிலாளி. இவர் மனைவி வந்தனா, 24. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
நேற்று இரவு 8:00 மணிக்கு குடித்து விட்டு வெங்கடேசன் வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் குழந்தை இல்லா ஏக்கத்தில் வீட்டில் இருந்த ஒரு அறைக்கு சென்ற வெங்கடேசன் மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாழப்பந்தல் போலீசார் விசாரிக்கின்றனர்.
* மாணவன் தற்கொலை: வேலுார் மாவட்டம், பாகாயம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் சேகர், 45. ஜூஸ் கடை வைத்துள்ளார். அவர் மகன் விக்னேஷ், 18. இவர் சரியாக படிக்காததால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் வேலை செய்து வந்தார். இதை அவரது தந்தை அடிக்கடி சொல்லிக் காட்டியதால், மனமுடைந்த விக்னேஷ் நேற்று இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X