பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 142 இடங்களில் தடுப்பூசி முகாம் : கோவை மக்களுக்கு வாய்ப்பு

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டத்தில் இன்று 142 இடங்களில் நடக்கும் முகாம்களில், 64 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் சமீரன் வெளியிட்ட அறிக்கை:கோவை மாவட்டத்தில் இன்று மாநகரில் 66 தடுப்பூசி முகாம்களும், ஊரக பகுதியில் 52 முகாம்களும், சிறப்பு முகாம்கள் 24 இடங்களிலும் நடத்தப்பட உள்ளன. 64,310 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு



கோவை : கோவை மாவட்டத்தில் இன்று 142 இடங்களில் நடக்கும் முகாம்களில், 64 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் சமீரன் வெளியிட்ட அறிக்கை:

கோவை மாவட்டத்தில் இன்று மாநகரில் 66 தடுப்பூசி முகாம்களும், ஊரக பகுதியில் 52 முகாம்களும், சிறப்பு முகாம்கள் 24 இடங்களிலும் நடத்தப்பட உள்ளன. 64,310 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காரமடையில் மூலத்துறை, வச்சிநாம்பாளையம், அயர்பாடி, மடோனா ஹாஸ்டல் சேரன் நகர், அன்னுாரில் குமாரபாளையம், உத்துப்பாளையம், அல்லிக்காரன்பாளையம், கணேசபுரத்தில் இன்று முகாம் நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையத்தில் ராவுத்து கொல்லனுார், ராக்கிபாளையம், ஜோதிபுரம், ராமநாதபுரம், கணுவாய், தொண்டாமுத்துாரில் கள்ளிபாளையம், ஆறுமுக கவுண்டனுார், கோட்டைக்காடு, இக்கரை போளுவாம்பட்டியில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.மதுக்கரையில் வெள்ளலுார், மதுக்கரை, குரும்பபாளையம், சின்னியகவுண்டம்புதுார், எட்டிமடையிலும், சோமனுாரில் அரசூர், நீலம்பூர், சூலுார், கண்ணம்பாளையத்திலும் முகாம் நடக்கிறது.சுல்தான்பேட்டையில் ஜல்லிப்பட்டி, வரப்பாளையம், பாப்பம்பட்டி, எஸ்.எஸ்.குளத்தில் கல்லுக்குழி, வரதய்யா நகர்பாளையம், எஸ்.எஸ்.குளம், மணியகாரன்பாளையம்,மேட்டுப்பாளையம் நகராட்சி ஆகிய இடங்களிலும் முகாம் நடக்கிறது.

மாநகராட்சி எல்லைக்குள் முகாம் நடக்கும் இடங்கள் வருமாறு:
மேற்கு மண்டலம்இடையர்பாளையம் அரசு துவக்கப்பள்ளி, கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, கே.கே.புதுார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பி.என்.புதுார் உயர்நிலைப்பள்ளி, கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, பூசாரிபாளையம் சமுதாயக்கூடம், பெட்டர் மவுண்ட் பேட்டை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, சாய்பாபா கோவில் சாய்பாபா வித்யாலயா பள்ளி, வடவள்ளி மருதமலை திருக்கோவில் பள்ளி, ராமலிங்கம் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சுண்டப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி.
கிழக்கு மண்டலம் கருப்பராயன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, புது காலனி சமுதாய நலக்கூடம், விளாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, நீலிக்கோனாம்பாளையம் நடுநிலைப்பள்ளி, எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி நடுநிலைப்பள்ளி, ஒண்டிபுதுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி., பெண்கள் பள்ளி, சிங்காநல்லுார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.என்.வி., அரசு ஆண்கள் பள்ளி, கணேசபுரம் மாநகராட்சி பள்ளி, நஞ்சுண்டாபுரம் நாடார் உயர்நிலைப்பள்ளி, சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி பள்ளி, உடையாம்பாளையம் ஆரம்பப்பள்ளி,தண்ணீர் பந்தல் ராமன் செட்டியார் பள்ளி.மத்திய மண்டலம்சங்கனுார் பள்ளி, ரத்தினபுரி பள்ளி, வடகோவை பள்ளி, சித்தாபுதுார் பள்ளி, தேவாங்கப்பேட்டை ஆரம்பப்பள்ளி, மாநகராட்சி பெண்கள் பள்ளி, ராமநாதபுரம் ஆரம்பப்பள்ளி, சுந்தரேசன் லே அவுட் ஆரம்பப்பள்ளி, ஈஸ்வரன் கோவில் வீதி நடுநிலைப்பள்ளி, ஒக்கிலியர் காலனி பள்ளி, ம.ந.க. வீதி நடுநிலைப்பள்ளி, ராஜா வீதி பெண்கள் பள்ளி.வடக்கு மண்டலம்சுப்பிரமணியம்பாளையம் நடுநிலைப்பள்ளி, வெள்ளக்கிணறு ஆரம்பப்பள்ளி, சரவணம்பட்டி ரூபி பள்ளி, விநாயகபுரம் இளங்கோ பள்ளி, மணியகாரம்பாளையம் உயர்நிலைப்பள்ளி, கணபதி கணேஷ் லே அவுட் ஆரம்பப்பள்ளி, துடியலுார் நடுநிலைப்பள்ளி, சரவணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, கணபதி அரசு உயர்நிலைப்பள்ளி, பி.என்.பாளையம் நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணபுரம் நடுநிலைப்பள்ளி.தெற்கு மண்டலம்தெலுங்குபாளையம் விஷ்வேஸ்வரா வித்யாலயம், செல்வபுரம் ஆரம்பப்பள்ளி, சலிவன் வீதி மாரண்ண கவுடர் பள்ளி, கரும்புக்கடை அத்தர் ஜமாத் பள்ளி, குனியமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, இடையர்பாளையம் உயர்நிலைப்பள்ளி, சுண்டக்காமுத்துார் அரசு பள்ளி, குளத்துப்பாளையம் அரசு பள்ளி, சுகுணாபுரம் அரசு பள்ளி, குறிச்சி அரசு பள்ளி, காமராஜ் நகர் அரசு பள்ளி, கே.வி.கே., பள்ளி, கோணவாய்க்கால்பாளையம் அரசு பள்ளியில் முகாம் நடக்கிறது.

முகாமில் காலை 9:00 மணி முதல் டோக்கன் வழங்கப்படும். தடுப்பூசி போடும் பணி 10 மணிக்கு தொடங்கும்.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-202116:34:18 IST Report Abuse
Ram Pollachi மூன்றாவது டோஸ் எப்போது போடுவாங்க என்று பலர் ரெடியாக உள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது பதில் உண்டா ஐயா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X