இந்தியா-ஆப்கன் இடையே அரசியல், வர்த்தக உறவை பேண விருப்பம்: தலிபான்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
காபூல்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான பெருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பேண விரும்புவதாக, தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.ஆப்கனில் சுமார் 500 திட்டங்களை மேற்கொள்ள 3 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.22,000 கோடி) இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து

காபூல்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான பெருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பேண விரும்புவதாக, தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் சுமார் 500 திட்டங்களை மேற்கொள்ள 3 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.22,000 கோடி) இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஷேர் முகமது அப்பாஸ் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



தெற்காசியாவில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. அந்நாட்டுடன் ஆப்கனுக்கு உள்ள அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளுக்கு தலிபான்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். அவற்றை தொடர்ந்து பேண விரும்புகிறோம்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த நிர்மாணிக்கப்பட்ட வான் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் வழியாக இந்தியா - ஆப்கன் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



உத்தரகண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில், கடந்த 1980ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளிநாட்டு ராணுவ வீரர் என்ற முறையில் ஷேர் முகமது அப்பாஸ் பயிற்சி பெற்றார். அவர் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் இணைந்த நிலையில், பின் அந்தப் பணியில் இருந்து விலகி தலிபான்களுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஆக-202109:06:10 IST Report Abuse
பேசும் தமிழன் நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்..... உங்கள் சவகாசமே வேண்டம்
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
31-ஆக-202104:42:57 IST Report Abuse
oce தாலிபான் அயோக்கியர்களை இந்தியாவுக்குள் சேர்க்க கூடாது.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
30-ஆக-202120:42:57 IST Report Abuse
Rajagopal மற்ற நாடுகள் தாலிபான் ஆட்சியோடு ஒத்துழைக்க சம்மதித்தால், இந்தியாவும் தொடர்பு வைத்துக்கொள்வதில் தவறில்லை. சில நாடுகளில் ராணுவ ஆட்சி வந்து விடுகிறது. அது எல்லோருக்கும் சம்மதமாகாவிட்டால்கூட, அந்த நாடுகளுடன் எல்லாம் தொடர்வதை பார்த்திருக்கிறோம். அதனால் இந்தியா தாலிபான் அரசோடு வர்த்தகத்தைத் தொடர்வதில் தவறில்லை. உணர்ச்சிகளால் முடிவெடுப்பது தவறு.
Rate this:
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
31-ஆக-202110:28:28 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRNபயங்கரவாதிகளின் அமைப்பு ஒன்று ஆட்சியைப் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. அங்கு சிவில் ரூல் கிடையாது ///ஐ.எஸ் ,பயங்கரவாதி இப்படி நல்லுறவு வெந்துப்பினும் என்று சொன்னால் நம்ப முடியுமா? இவனும் அப்படித் தான்.////சொன்ன வார்த்தையை அல்லது போட்ட ஒப்பந்தத்தை மீறுவதெல்லாம் மத நோக்க வெறி பிடித்தவனிடம் எதிர் பார்க்க முடியுமா ? அவனுடைய இந்நாள் வரையிலான டிராக் ரெக்கார்ட் என்ன? விஷன் மற்றும் மிஷன் என்ன? பாகிஸ்தானிலாவது பயங்கரவாதிகளின் இருப்பிடத்தில் மட்டுமே ஆயதம் தாங்கிய பயங்கரவாதிகள் நடமாட்டம் இருக்கும்.///ஆனால் இந்த ஆப்கனிலோ அங்கிங்கென்னாது அங்குலம் அங்குலமாக எங்கு பார்த்தாலும் இடுப்பிலும் கைகளிலும் பயங்கர ஆயுதத்துடனேயே கொடிய பயங்கர வாதிகள் எக்கச்சக்கமாக சுற்றி சுற்றி வருகிறார்கள்/// மத அடிப்படையில் எல்லாவற்றையும் அணுகும் இவன் இந்தியா போன்ற நாட்டை எந்த விதமாக அணுகுவான் ...இவனுடன் உறவு கொள்ளாததால் என்ன இழப்பு ஏற்படும் என்பதையெல்லாம் நிதானமாக சிந்திக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X