பொது செய்தி

இந்தியா

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: டோக்கியோவில் நடந்து வரும் 16வது பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர். நேற்றும் (ஆக.,29) இன்றும் (ஆக.,30) இந்தியாவிற்கு இதுவரை 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இன்று காலை
Tokyo2020, Paralympics, PMModi, Wishes, Medalists, டோக்கியோ, பாராலிம்பிக், இந்திய வீரர்கள், பதக்கம், வெற்றி, பிரதமர் மோடி, பாராட்டு, வாழ்த்து

புதுடில்லி: டோக்கியோவில் நடந்து வரும் 16வது பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர். நேற்றும் (ஆக.,29) இன்றும் (ஆக.,30) இந்தியாவிற்கு இதுவரை 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இன்று காலை மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் வென்றார். ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளியும், சுந்தர் குர்ஜார் வெண்கலமும் வென்றனர். வட்டு எறிதலில் யோகேஷ் காதுன்யா வெள்ளி வென்றார். இவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், இன்று பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்து செய்தி: சிறந்த முறையில் அவனி லெகாரா செயல்பட்டுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில், இயற்கையிலேயே உங்களுக்கு அமைந்த கடின உழைப்பு மற்றும் ஆர்வம் ஆகியவற்றால் இந்த வெற்றி சாத்தியப்பட்டு உள்ளது. தங்கம் வெல்ல தகுதி கொண்ட, கடின உழைப்பாளியான உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்திய விளையாட்டில் உண்மையில் இது ஒரு சிறப்பு தருணம். வருங்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news


வட்டு எறிதலில் யோகேஷ் காதுன்யா வெள்ளி வென்றது குறித்து மோடியின் வாழ்த்து: யோகேஷ் காதுனியா சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் வெள்ளிப்பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. அவரது இந்த சிறப்பான வெற்றி வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஆக-202110:37:58 IST Report Abuse
அப்புசாமி பதக்கமெல்லாம் வாங்கிட்டு வந்தப்புறம் பாராட்டு சொல்லணும். இங்கேருந்து கெளம்பும் போதே கலந்துரையாடல், பாராட்டுன்னு சொல்லி டென்ஷன் பண்ணுனதால சிலர் தங்கம் வாங்க முடியாம போச்சு.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிலேயே மிகவும் பிரீயா இருப்பவர் பிரதமர் மோடி தான்னு உறுதியா சொல்லலாம் ரொம்ப பொறாமையா இருக்கு
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-ஆக-202119:05:46 IST Report Abuse
sankaseshan பிரதமர் இப்படித்தான் நம்பிக்கை ஊட்ட கூடியவரா இருக்கணும் சிலர் குற்றம் சொல்லரத்துக்கே பொறந்து ருக்கனுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X