டெல்டா பரவல் அதிகரிப்பு: ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு நீட்டிப்பு

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மெல்போர்ன்: கோவிட் வைரஸ் 2வது அலையின் கோரப்பிடியில் ஆஸ்திரேலியா சிக்கியுள்ளது. டெல்டா வகை கோவிட் வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.ஆஸ்திரேலியாவின் 2வது மிகப்பெரிய நகரமான, 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்னில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தும் அங்கு டெல்டா கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மெல்போர்ன்: கோவிட் வைரஸ் 2வது அலையின் கோரப்பிடியில் ஆஸ்திரேலியா சிக்கியுள்ளது. டெல்டா வகை கோவிட் வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.



latest tamil news



ஆஸ்திரேலியாவின் 2வது மிகப்பெரிய நகரமான, 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்னில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தும் அங்கு டெல்டா கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 92 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



இதுகுறித்து, விக்டோரியா மாகாணத்தின் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் கூறுகையில், 'ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக கோவிட் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்தது. ஊரடங்கை திரும்பப் பெற முடியாத அளவுக்கு மெல்போர்ன் நகரில் தொடர்ந்து டெல்டா வகை கோவிட் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
30-ஆக-202119:54:05 IST Report Abuse
elakkumanan மோடி ஒழிக...........இப்படிக்கு, சிற்றூராட்சி ஒன்றிய கடை வாசலில் படுத்து கிடக்கும் கடை குடி மாக்கான்.....
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
30-ஆக-202113:21:56 IST Report Abuse
S.Baliah Seer வியாதிகளைக் கட்டுப்படுத்த மருந்து ,ஊசி தான் தேவை.அதைச் செய்யாமல் ஊரடங்காவது ,புண்ணாக்காவது,போங்கய்யா?
Rate this:
JSS - Nassau,பெர்முடா
30-ஆக-202116:13:21 IST Report Abuse
JSSமருந்து கண்டுபிடிப்பென்பது என்ன அவ்வளவு சுலபமான வேலையா ? இப்ருந்து வருவதற்கு போதுதான் தடுப்பொசி வந்துள்ளது .மருந்து வருவதற்கு குறைந்தது 3 வருடமாவது ஆகும். ஊரடங்கு இல்லாவிட்டால் புண்ணனாக்காகித்தான் போவீர்கள்....
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
30-ஆக-202120:01:11 IST Report Abuse
Sanny S. Baliah Seer ஜி, தெரியாமல் கருத்து எழுதக்கூடாது, கொரோனவை கட்டுப்படுத்திய நாடுகளில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருந்தது கடந்த வருடம், ஆஸ்திரேலியா அரசு தங்களுக்கு வந்த தடுப்புமருந்தை ஆஸ்திரேலியா வைரஸின் தாக்கம் மிகக்குறைவாக இருந்ததால் தனது தடுப்பு மருந்துகளை ஆபிரிக்கநாட்டுக்கு தாரைவார்த்து அவர்களை காப்பாற்றியது. இப்போ முழுமூச்சாக தடுப்புக்களை செலுத்தி வருது, நேற்றுமட்டும் மெல்போனில் 80 தடுப்பூசி போட்டு சாதனை படைத்து ஒக்டோபரில் 80% அதிகமாவர்களுக்கு ஊசிபோட்டு நாட்டை வழமைக்கு கொண்டுவர முயச்சிக்குது. இதில் வேடிக்கை என்னவென்றால் சில மார்க்கத்தவர்கள் தடுப்பூசிபோட அடம்பிடிக்கிறார்கள், அவர்களின் சமூகத்தால் தான் இரண்டாவது கொரோனா அலை இங்கு தீவிரமாக இருக்கு....
Rate this:
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
30-ஆக-202113:11:28 IST Report Abuse
B. இராமச்சந்திரன் ஒரு நாளில் 1305 புதிய தொற்றுக்கே 4 வாரங்களுக்கு மேல் ஆஸ்திரேலியாவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது... ஆனால் கேரளாவில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் புதிய கேஸ் வந்தாலும் பினராயி கூலாக இருக்கிறார்... இப்பொழுதான் போனால் போகட்டும் என்று எல்லோரும் தூங்கியபிறகு இரவு ஊரடங்கை அறிவித்து இருக்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X