கிளர்ச்சி பகுதியில் தகவல் தொடர்பை முழுமையாக துண்டித்த தலிபான்கள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
காபூல் : ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இருக்கும் பஞ்ச்ஷிர் பகுதிக்கான தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை தலிபான்கள் முழுமையாக துண்டித்துள்ளது தெரியவந்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி தங்கள் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.நாளைக்குள் அமெரிக்க படையினர் முழுமையாக வெளியேற வேண்டும என

காபூல் : ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் இருக்கும் பஞ்ச்ஷிர் பகுதிக்கான தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை தலிபான்கள் முழுமையாக துண்டித்துள்ளது தெரியவந்துள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி தங்கள் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.நாளைக்குள் அமெரிக்க படையினர் முழுமையாக வெளியேற வேண்டும என தலிபான்கள் எச்சரித்து உள்ளனர்.இதற்கிடையே தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு ஹிந்து குஷ் மலைப்பகுதியின் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் முழுமையாக எதிர்ப்பு கிளம்பியது.

தலிபான்களால் ஏற்கனவே கொல்லப்பட்ட ராணுவ தளபதியின் மகனும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான அஹ்மத் மசூத் இந்த கிளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளார்.அதேபோல் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே அப்பகுதியில் தஞ்சம் அடைந்ததுடன் அஹ்மத் மசூதுடன் இணைந்து தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் சர்வதேச நாடுகளுடன் தொடர்பில் இருப்பது மற்றும் அவர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை தலிபான்கள் விரும்பவில்லை.எனவே அப்பகுதிக்கான தொலைபேசி மற்றும் இணைய சேவைஇணைப்புகளை தலிபான்கள் முழுமையாக துண்டித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X