பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை எழில்சூழ்ந்த ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருப்பத்துார்: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் 4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை உள்ளது. சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு பிறகு நேற்று
இயற்கை எழில்சூழ்ந்த ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

திருப்பத்துார்: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் 4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை உள்ளது. சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது.
படகு மையம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா என 7 இடங்களை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ., தேவராஜி திறந்து வைத்தார். முதல் நாளின் சுற்றுலாப்பயணிகள் குறைவாக வந்திருந்தனர். விடுமுறை நாளான இன்று பயணிகள் குவிந்தனர்.
கொரோனா விதிகளை கடைபிடிக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். முகக்கவசம் அணியாமல் வந்த 200க்கும் மேற்பட்டவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். சென்னையில் இருந்து அதிகளவுக்கு பயணிகள் வந்திருந்தனர். திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா இன்று ஏலகிரிமலைக்கு சென்று இயற்கை பூங்காவை ஆய்வு செய்தார்.
ஏலகிரி மலை பற்றிய விவரம்: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் உள்ளது. ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை, இதமான காற்று காணப்படுகிறது. மலையில் உள்ள அத்னாவூர், பொன்னேரி, நிலாவூர், மங்களம் என 14 கிராமங்களில் விவசாயம் செய்கின்றனர்.
ஏலகிரி மலை 29.2 சதுர கி.மீ., பரப்பளவு கொணடது. மக்கள் தொகை 14 ஆயிரம். மலையின் உயரம் 1,048.5 மீட்டர் கடல் மட்டத்திலிருந்து. சீதோஷ்ண நிலை கோடை காலம் 34 டிகிரி, குளிர் காலம் 11 டிகிரி. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மலைக்கு வர வேண்டும். ஒவ்வொரு வளைவிலும் இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
பார்க்க வேண்டிய இடங்கள்: புங்கனுார் ஏரி படகு இல்லம், குழந்தைகள் பூங்கா, முருகன் கோவில், அத்னாவூர், நிலாவூர் அரசு பழத்தோட்டம், புங்கனுார் ஏரி, அரசு மூலிகை பண்ணை, தொலை நோக்கு கருவி, ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி, மங்களம் ஏரி, நடை பயணம் செய்யலாம், நிலாவூர் தம்புரான் குளம், தேவ நாச்சியம்மன் கோவில்பரண் பார்வை மையம், அத்னாவூர் ஏரி படகு மையத்தில் படகு சவாரி, இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா.
துாரம்: சென்னையில் இருந்து 236 கி.மீ., வேலுாரில் இருந்து 91 கி.மீ., வாகனத்தில் வருபவர்கள் வர நல்ல சாலை உள்ளது. சென்னையில் இருந்து வாணியம்பாடி - ஜோலார்பேட்டைக்கு செல்லும் சாலையில் பொன்னேரி கூட்டு சாலையில் இருந்து மலைக்குச் செல்லலாம். ரயில் மூலம் வருபவர்கள் சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு மார்க்கத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து 20 கி.மீ., துாரம் உள்ள ஏலகிரி மலைக்கு வரலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X