'கைதான போலீஸ் மீது துறை நடவடிக்கை'

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவை : கார் டிரைவர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கையை சேர்ந்தவர் மகேஸ்வரன், 33; கார் டிரைவர். திருப்பூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்தவர் கடந்த வாரம் பல்லடம் அருகே சென்றபோது கடத்தப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைத்து டிரைவரை கடத்தி கும்பலை போலீசார் கைது செய்தனர்.இதில், கோவை மாநகர

கோவை : கார் டிரைவர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையை சேர்ந்தவர் மகேஸ்வரன், 33; கார் டிரைவர். திருப்பூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்தவர் கடந்த வாரம் பல்லடம் அருகே சென்றபோது கடத்தப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைத்து டிரைவரை கடத்தி கும்பலை போலீசார் கைது செய்தனர்.இதில், கோவை மாநகர போலீசில் பணியாற்றும் போலீஸ்காரர் ராஜேஸ்வரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மாநகர ஆயுதப்படையில் உள்ள இவர், மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனரின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேஸ்வரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஓரிரு நாளில் சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்படும் என, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X