கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு

Added : ஆக 30, 2021
Share
சென்னை : கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கான

சென்னை : கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தலுக்கு செப். 30ம் தேதிக்குள்ளும் புதிதாக விண்ணப்பிக்க நவ. 5ம் தேதிக்குள்ளும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை நவ. 14 தேதிக்குள்ளும் புதிய விண்ணப்பங்களை டிச. 31ம் தேதிக்குள்ளும் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை கலெக்டர் அலுவலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம். இத்திட்டங்களுக்காக விண்ணப்பங்கள் www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்தில் உள்ளது என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X