உயர்கல்வி உதவித்தொகை: இயக்குனரகம் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயர்கல்வி உதவித்தொகை: இயக்குனரகம் விளக்கம்

Added : ஆக 30, 2021
Share
சென்னை : கல்லுாரிகளில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.தமிழகத்தில், கல்லுாரி படிப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்கள்; ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள், தங்களுக்கான கல்வி உதவி தொகையை பெற, கல்லுாரிகளை நாடியுள்ளனர்.ஆனால், மத்திய அரசே நேரடியாக உதவி தொகை வழங்குவதால்,


சென்னை : கல்லுாரிகளில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில், கல்லுாரி படிப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்கள்; ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள், தங்களுக்கான கல்வி உதவி தொகையை பெற, கல்லுாரிகளை நாடியுள்ளனர்.ஆனால், மத்திய அரசே நேரடியாக உதவி தொகை வழங்குவதால், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, மாணவர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

கல்லுாரி கல்வி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால், திறன் அடிப்படையில் வழங்கப்படும் கல்வி உதவி தொகையை பெற, மத்திய அரசின், https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு நவ., 30 வரை விண்ணப்பிக்கலாம்.தற்போது பிளஸ் 2 முடித்து, உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள், 2016 முதல் படித்து வரும் மாணவர்கள், தங்களுக்கான கல்வி உதவி தொகை விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை, உதவி தொகைக்கான இணையதளத்திலேயே மேற்கொள்ள வேண்டும்.இதற்கான விதிமுறைகளையும் இணையதளத்தில் பார்த்து கொள்ளவும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X