சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அண்ணனை கொன்ற தம்பி கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஆற்காடு: ஆற்காடு அருகே, அண்ணனைக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த காவனுாரைச் சேர்ந்தவர் பெருமாள், 84. அவர் மனைவி லட்சுமி, 70. இவர்களுக்கு எட்டு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் நாராயணன், 41, அவரது தம்பி கணபதி, 25 ஆகியோருடன் பெருமாள், லட்சுமி வசித்து வருகின்றனர்.நேற்று இரவு 10:00 மணிக்கு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த

ஆற்காடு: ஆற்காடு அருகே, அண்ணனைக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த காவனுாரைச் சேர்ந்தவர் பெருமாள், 84. அவர் மனைவி லட்சுமி, 70. இவர்களுக்கு எட்டு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் நாராயணன், 41, அவரது தம்பி கணபதி, 25 ஆகியோருடன் பெருமாள், லட்சுமி வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு 10:00 மணிக்கு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த நாராயணன் சாப்பாடு கேட்டுள்ளார். சாப்பாடு இல்லை என தாய் லட்சுமி கூறினார். இதனால் தாய் என்று பார்க்காமல் லட்சுமியை ஆபாசமாக திட்டினார். ஆத்திரமடைந்த தம்பி கணபதி, அண்ணன் என்று பாராமல் கத்தியால் குத்தியதில் சம்பவம் நடந்த இடத்திலேயே நாராயணன் இறந்தார். திமிரி போலீசார் கணபதியை இன்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X