தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு பல்லடத்தில் மேலும் மூவர் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பல்லடம் : இலங்கை தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய, மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்; கார் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் அம்மாபாளையத்தில் வசித்தவர் மகேஸ்வரன், 32. கடந்த 26ம் தேதி, பல்லடம், பெரும்பாளி என்ற இடத்தில், மூன்று காரில் சென்ற, ஏழு பேர் கொண்ட கும்பல், மகேஸ்வரனை கடத்தியது.இச்சம்பவத்தில், தங்கம் கடத்தல் கும்பலின் பின்னணி தெரிந்தது. ஐந்து போலீஸ் தனிப்படைகள்
 தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு பல்லடத்தில் மேலும் மூவர் கைது


பல்லடம் : இலங்கை தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய, மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்; கார் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் அம்மாபாளையத்தில் வசித்தவர் மகேஸ்வரன், 32. கடந்த 26ம் தேதி, பல்லடம், பெரும்பாளி என்ற இடத்தில், மூன்று காரில் சென்ற, ஏழு பேர் கொண்ட கும்பல், மகேஸ்வரனை கடத்தியது.இச்சம்பவத்தில், தங்கம் கடத்தல் கும்பலின் பின்னணி தெரிந்தது. ஐந்து போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கும்பலிடம் இருந்து, மகேஸ்வரன் மீட்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட யாசர் அராபத், 34, முகமது ரிஸ்வான், 31, உடந்தையாக இருந்த கோவையை சேர்ந்த போலீஸ்காரர் ராஜேஸ்வரன் ஆகியோரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.

உடந்தையாக இருந்ததாக முன்னாள் போலீஸ்காரர், அன்னுார் கோவில்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், 39, சற்குணம், சாகுல் அமீது ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். கோவை மாநகர போலீசில், 2008ம் ஆண்டு வரை வேலை பார்த்தவர் கார்த்திக். இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பி.எம்.டபிள்யூ., காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
உருளும் அரசியல் தலைகள்

கடத்தப்பட்ட மகேஸ்வரன் ராமநாதபுரத்தில், கார் டிரைவராக பல ஆண்டாக வேலை செய்ததும், இலங்கையில் இருந்து, தங்கம் கடத்தி வரும் பணியை மேற்கொண்டதும் தெரியவந்தது.விசாரணையில், பெரிய வலைப்பின்னலுடன் கூடிய தங்கம் கடத்தல் கும்பலும், அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் பின்னணியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.மகேஸ்வரன் இருப்பிடத்தை அறிவதற்காக சிவகங்கையில் இருந்து மகேஸ்வரனின் நண்பர்கள் இருவர் கடத்தப்பட்டனர். அவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

போலீசார் கூறியதாவது:

ராமநாதபுரத்திற்கு கள்ளத்தோணி மூலம் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்பட்டுள்ளது. பல்லடம் வழக்கில், மகேஸ்வரன் தான் பாதிக்கப்பட்ட நபர். தங்கம் கடத்தல் குறித்து திருப்பூர் மாவட்ட போலீசாரால் மேலும், விசாரணை நடத்த இயலாது. அதே நேரம், திருப்பூர், சிவகங்கை, ராமநாதபுரம் என, மூன்று மாவட்ட போலீசாரும் இணைந்து, இதற்கான நடவடிக்கையை எடுத்தால் பெரிய, 'முதலை'களும் சிக்குவர்.சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து விசாரித்தால், பல விபரங்கள் தெரியவரும். 'ஹவாலா' பணம் மூலம் பலர், தங்கம் கடத்தலில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X