அமராவதி அணை உபரி நீர் வெளியேற்றம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்தது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை ஜூலை 23ம் தேதி, நிரம்பியது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நேற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தகன மழை காரணமாக, அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.நேற்று மாலை நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 88.49
 அமராவதி அணை உபரி நீர் வெளியேற்றம்


உடுமலை : உடுமலை அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை ஜூலை 23ம் தேதி, நிரம்பியது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நேற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்தகன மழை காரணமாக, அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.நேற்று மாலை நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 88.49 அடியாகவும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,910.29 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.அணைக்கு வினாடிக்கு, 2,500 கன அடி நீர் வரத்து இருந்தது. வினாடிக்கு, 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில்,' மிக கன மழை வாய்ப்புள்ளதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, வரும் நீர் அனைத்தும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோர மக்கள் கவனமாக இருப்பது அவசியம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X