எங்களின் புதிய ஆட்சியை அனைத்து நாடுகளும் ஆதரிக்கும்: தலிபான்கள் நம்பிக்கை

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
காபூல்: ‛‛எங்களின் புதிய ஆட்சியை அனைத்து நாடுகளும் ஆதரிக்கும். யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை,'' என, ஆப்கனில் அமையவுள்ள தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், தலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சராக ஷெர் முகமது அப்பாஸ்
All Countries, Will Support, Taliban Govt, Afghanistan, Taliban, Afghan, அனைத்து நாடுகள், தலிபான்கள், ஆதரவு, நம்பிக்கை, ஆப்கன், ஆப்கானிஸ்தான்

காபூல்: ‛‛எங்களின் புதிய ஆட்சியை அனைத்து நாடுகளும் ஆதரிக்கும். யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை,'' என, ஆப்கனில் அமையவுள்ள தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், தலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சராக ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் பொறுப்பேற்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவர், இந்திய ராணுவ அகாடமியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: உலக நாடுகள் அனைத்துடனும் நாங்கள் நட்புறவு பாராட்டவே விரும்புகிறோம். 20 ஆண்டுகள் அமெரிக்கப் படைகள் இங்கு இருந்தன, இப்போது படைகளை விலக்கிக் கொண்டனர்.


latest tamil news


அமெரிக்காவுடன் நட்புறவுடன் தான் இருந்தோம். அவர்கள் மீண்டும் வந்து ஆப்கன் புனரமைப்பு திட்டத்தில் பங்கு பெற வேண்டும். அமெரிக்காவுடன் பண்பாட்டு, பொருளாதார நட்புறவு பேண விரும்புகிறோம். இந்தியா மட்டுமல்ல, தஜிகிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் என்று அனைத்து நாடுகளுடனும் நட்புறவே பேணுவோம். ஆப்கனை ரஷ்யர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன் எனது இளமை பருவத்தில் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றேன். தற்போது அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.


latest tamil news


ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களும், சீக்கியர்களும் வெளியேற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இங்கு அமைதியாக வாழலாம், அவர்களுக்கு தீங்கு இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கனிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற இந்துக்களும், சீக்கியர்களும் கூட மீண்டும் ஆப்கன் வந்து வாழலாம். எங்களின் புதிய ஆட்சியை அனைத்து நாடுகளும் ஆதரிக்கும். யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஆக-202110:35:12 IST Report Abuse
அப்புசாமி புதுசா ஆட்சி அமைக்கிறீங்க. நிறைய ராணுவ தளவாடம், ஏவுகணைகள் தேவைப்படும்.மக்களை அடக்கி வெக்கணும். அமெரிக்கா, பிரிட்டன், சீனா எல்லாம் ஏவுகணை , தளவாடம் விக்கும். நாங்களும் உங்களுக்கு சர்டிபிகேட் குடுத்து தளவாடம், ஏவுகணை விப்போம்ல.
Rate this:
Cancel
31-ஆக-202108:05:36 IST Report Abuse
ravi chandran ஆப்கானிஸ்தானில் விடியல் அரசு. ஆரம்ப விழாவிற்கு பயணம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-ஆக-202122:31:21 IST Report Abuse
sankaseshan ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கும் தமிழக திமுக தாலிபான்களுக்கும் வித்தியாசம் இல்லய் இரண்டும் ஒன்றே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X