கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மண் கடினத்தன்மை அறிய டெண்டர்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவை : கோவை மெட்ரோ ரயில் வழித்தடத்தில், மண், பாறைகளின் கடினத்தன்மை அறிந்து, அறிக்கை அளிப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.கோவையில் மெட்ரோ ரயில் திட்டம், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில், 6,683 கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும், அறிவிப்பு வெளியானது.திட்டத்தை செயல்படுத்துவதற்காக, ஐந்து வழித்தடங்களை கொண்ட வழித்தடங்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவை மெட்ரோ ரயில் வழித்தடத்தில், மண், பாறைகளின் கடினத்தன்மை அறிந்து, அறிக்கை அளிப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில், 6,683 கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும், அறிவிப்பு வெளியானது.திட்டத்தை செயல்படுத்துவதற்காக, ஐந்து வழித்தடங்களை கொண்ட வழித்தடங்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் மண், பாறை கடினத்தன்மையை அறிந்தபிறகே, சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய முடியும்.

எனவே, வழித்தடத்தில் வெவ்வேறு இடங்களில், நவீன இயந்திரங்களில் துளையிட்டு, மண், பாறைகளின் கடினத்தன்மையை அறிவதற்கான டெண்டரை, மத்திய அரசின் 'ரைட்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 145 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ ரயில் வழித்தட பாதையில், 296 இடங்களில் ஆழ்துளையிட்டு, மண் கடினத்தன்மை அறிக்கை அளிக்க வேண்டும்.
மூன்று பேக்கேஜ்களாக பிரிக்கப்பட்டுள்ள, இந்த டெண்டரின் மொத்த மதிப்பு, 90 லட்சம் ரூபாய். டெண்டர் எடுக்கும் நிறுவனம், மூன்று மாத காலத்தில் பணியை முடிக்க வேண்டும் என்று, நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X