அமைச்சருக்கு 'சம்மன்': மஹா., அரசுக்கு சிக்கல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுடில்லி : மஹா., போக்குவரத்து துறை அமைச்சருக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா காங்கிரஸ் தேசியவாத காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அனில் தேஷ்முக் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது.இதையடுத்து அனில் தேஷ்முக் பதவி

புதுடில்லி : மஹா., போக்குவரத்து துறை அமைச்சருக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா காங்கிரஸ் தேசியவாத காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அனில் தேஷ்முக் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது.இதையடுத்து அனில் தேஷ்முக் பதவி விலகினார். இவர் மீது பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

இந்நிலையில் சிவசேனாவை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பராப்புக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே 'கைது செய்ய வேண்டிய அளவிலான குற்ற செயலில் அனில் தேஷ்முக் ஈடுபடவில்லை' என கூறி வழக்கை முடித்துக் கொள்ளும்படி சி.பி.ஐ. விசாரணை அதிகாரி தாக்கல் செய்துள்ள அறிக்கை ஊடகங்களில் கசிந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X