அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலால் தான் பொதுமக்கள் உயிரிழந்தனர்: தலிபான்கள் புகார்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
காபூல்: 'அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலால் தான் காபூலில் நேற்று பொது மக்கள் உயிரிழந்தனர்' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார்.சீனத் தொலைக்காட்சிக்கு இன்று (ஆக., 30) தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது:காபூலில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதியைக் குறிவைத்து, அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான

காபூல்: 'அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலால் தான் காபூலில் நேற்று பொது மக்கள் உயிரிழந்தனர்' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தெரிவித்துள்ளார்.சீனத் தொலைக்காட்சிக்கு இன்று (ஆக., 30) தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



காபூலில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதியைக் குறிவைத்து, அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியாகினர். உயிரிழப்பு ஏற்படுவதற்கு அமெரிக்காவின் தாக்குதலே காரணம். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன், அமெரிக்கா எங்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தெரிவித்திருக்க வேண்டும். ஆப்கனில் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், அது எங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்னிச்சையான தாக்குதலாக அது இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news



காபூல் விமான நிலையத்தில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நடத்த இருந்தார். இதையடுத்து நாங்கள் தாக்குதல் நடத்தினோம். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்' என, அமெரிக்க ராணுவம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
01-செப்-202105:00:10 IST Report Abuse
meenakshisundaram அதுனால் என்ன குறைஞ்சி போச்சு ? ஷரியத்தினால் சாவதை விட அவனுக்கு நல்லதே நடந்துருக்கு ,அப்படி செத்தவங்க இப்போ நீ சொல்றபடி சொர்கத்துக்குள்ளே நுழஞ்சிட்டாங்க
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
31-ஆக-202106:12:40 IST Report Abuse
NicoleThomson பாகிஸ்தான் சொன்னது போலவே சொல்றியேடா , அவனுங்க அனுபவம் உனக்கு கைகுடுக்குது போல?
Rate this:
Cancel
30-ஆக-202121:43:21 IST Report Abuse
அப்புசாமி ஆமாம். தாடி மேலெ சத்தியமா சொல்றேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X