பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது தங்கம்; ஈட்டி எறிதலில் இந்திய வீரர் உலக சாதனை

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
டோக்கியோ: பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் உலக சாதனை படைத்தார். 68.55 மீ., துாரம் எறிந்த இவர், தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்கள் ஈட்டி எறிதல் எப்-64 பிரிவு பைனல் நடந்தது. இந்தியா சார்பில் சுமித் அன்டில், சந்தீப் பங்கேற்றனர். முதல் வாய்ப்பில் 66.95 மீ., தூரம் எறிந்து உலக
Paralympics, Gold, Sumit Antil, ParaAthletics, Praise4Para, பாராலிம்பிக், தங்கம், சுமித் அண்டில், தடகளம், ஈட்டி எறிதல்

டோக்கியோ: பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் உலக சாதனை படைத்தார். 68.55 மீ., துாரம் எறிந்த இவர், தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்கள் ஈட்டி எறிதல் எப்-64 பிரிவு பைனல் நடந்தது. இந்தியா சார்பில் சுமித் அன்டில், சந்தீப் பங்கேற்றனர். முதல் வாய்ப்பில் 66.95 மீ., தூரம் எறிந்து உலக சாதனை படைத்தார் சுமித். தொடர்ந்து இரண்டாவது வாய்ப்பில் 68.05 மீ., தூரம் எறிந்தார். 5வது வாய்ப்பில் ஜொலித்த இவர் 68.55 மீ., தூரம் எறிய, சற்று முன் படைத்த சாதனையை தகர்த்து, புதிய உலக சாதனை படைத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். சந்தீப் (62.20 மீ.,) நான்காவது இடம் பிடித்தார்.


latest tamil news
ஜஜாரியா அசத்தல்


ஆண்கள் ஈட்டி எறிதல் எப்-56 பிரிவில் இரு முறை தங்கம் (2004, 2016) வென்ற இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா, இம்முறை மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம் 64.35 மீ., தூரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது இவரது சிறந்த துாரமாக அமைந்தது. இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங், ஐந்தாவது வாய்ப்பில் 64.01 மீ., துாரம் எறிந்து மூன்றாவது இடம் பெற்று, வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.


மூன்று பதக்கம்


டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இன்று மட்டும் இந்தியாவின் சுமித் (தங்கம்), ஜஜாரியா (வெள்ளி), சுந்தர் (வெண்கலம்) என மூன்று பேர் பதக்கம் வென்றனர். தவிர ஒட்டுமொத்த பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியா 7 பதக்கம் வென்றது. இன்று காலையில் நடந்த மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவினா தங்கம் வென்றிருந்தார். தற்போது பதக்கப்பட்டியலில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 25வது இடத்திற்கு முன்னேறியது.


latest tamil newsபிரதமர் வாழ்த்து


தங்கம் வென்ற சுமித் அன்டிலிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து: நமது தடகள வீரர்கள் பாராலிம்பிக்கில் தொடர்ந்து பிரகாசிக்கிறார்கள். பாராலிம்பிக்கில் சுமித் அண்டிலின் மகத்தான சாதனையால் நாடு பெருமை கொள்கிறது. மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றதற்கு சுமித்திற்கு வாழ்த்துக்கள். எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-ஆக-202120:59:04 IST Report Abuse
Ramesh Sargam வாழ்த்துக்கள் இந்திய வீரர் சுமித் அண்டில் அவர்களுக்கு.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
30-ஆக-202120:11:30 IST Report Abuse
Sanny வாழ்த்துக்கள், அங்கத்தில் குறை இருந்தாலும் தங்கம் எடுப்பதில் சராசரி மனிதர்களைவிட , அங்கம் குறைந்தவர்கள் எவ்வளவோ மேல், அங்கம் குறைந்தவர்கள் சாதனை படைத்தாலும் தற்பெருமை, தலைக்கனம் இல்லை, சிந்து கூட பாட்மின்டனில் உலக சாதனையை வென்றவர், ஆனால் ஒலிம்பிக்கில் தங்கம் பெறக்கூடிய அளவுக்கு பின்நாளில் அவங்க முயச்சியும், மனமும் பக்குவப்படவில்லை, கர்நாடக அரசு அளவுக்குமிஞ்சி அவங்களை புகழ்ந்ததுதான் காரணம்.
Rate this:
Cancel
Ramakrishnan R - kalpakkam,இந்தியா
30-ஆக-202119:54:52 IST Report Abuse
Ramakrishnan R ஸ்மித் அண்டில், உங்களது உலக சாதனையும் தங்க பதக்கமும் இந்தியாவை பெருமையுறச் செய்கிறது. வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X