அரசியல் செய்தி

தமிழ்நாடு

செப்.1 முதல் 9- 12 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: தளர்வுகளுடன் ஊரடங்கு செப்.15 வரை நீட்டிப்பு

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு செப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்.1 முதல் 9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் இன்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது..தமிழகத்தில் தற்போது கோவிட் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது அலை தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த
செப்.1 முதல்,  9- 12 வகுப்பு வரை, பள்ளிகள் திறப்பு: தளர்வுகள், ஊரடங்கு, செப்.15 வரை, நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு செப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்.1 முதல் 9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் இன்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

தமிழகத்தில் தற்போது கோவிட் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது அலை தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது..


latest tamil news
இந்த சூழ்நிலையல் தமிழகத்தில் செப்.1 ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று (ஆக.30) வெளியிட்டுள்ள அறிவிப்பு,

* தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு செப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* சனி , ஞாயிறுகளில் அனைத்து கடற்கரைகளிலும், வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் கூட விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

* செப்.1 ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்.

* விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

* விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீ்ர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதியில்லை.

* தனியார் தங்கும் விடுதிகள் , பணிக்கு செல்லும் மகளிர் விடுதிகள் செயல்பட அனுமதி.

*
இந்த ஊரடங்கில் தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய் தொற்று அறிகுறி இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்கள் அனைவரும் அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கோவிட் தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வே்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
30-ஆக-202121:33:45 IST Report Abuse
Anbu Tamilan DMK Chief proves that he don't have the knowledge of Administration. He is purely Anti Hindu element. When Buses, trains, school, colleges & especially TASMAC , why temples are closed for week end? What will happen for Vinayagar Chathurthi? DMK started fearing by seeing the growth of Hindus with BJP. The more DMK controls, the more BJP will grow
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X