சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
தொடரும் கொரோனாகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு, 12 மாதங்கள் வரை குறைந்தது ஒரு அறிகுறியாவது இருக்கிறது என 'தி லான்செட்' இதழில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா தொடங்கிய சீனாவின் வூகானில் 1276 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தியதில் மூன்றில் ஒருவர் 12 மாதங்களுக்குப்பின்பும் மூச்சுத்திணறல் பாதிப்பை அனுபவிப்பதாகவும், கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்டு


தொடரும் கொரோனா



கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு, 12 மாதங்கள் வரை குறைந்தது ஒரு அறிகுறியாவது இருக்கிறது என 'தி லான்செட்' இதழில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா தொடங்கிய சீனாவின் வூகானில் 1276 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தியதில் மூன்றில் ஒருவர் 12 மாதங்களுக்குப்பின்பும் மூச்சுத்திணறல் பாதிப்பை அனுபவிப்பதாகவும், கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்டு குணமானவர்களில் சிலர் நுரையீரல் பாதிப்பு தொடர்ந்து இருந்ததாக தெரிவித்தனர். மற்றவர் களுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதித்தவர்கள் உடல்நலன் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


தகவல் சுரங்கம்



நீண்டகால அதிபர்

உலகில் தற்போதைய அதிபர் அல்லது பிரதமர்களில் நீண்டகாலம் பதவியில் இருப்பவர் கேமரூன் அதிபர் பவுல் பியா பெற்றுள்ளார். இவர் முதன்முதலில் 1975 ஜூன் 30 - 1982 நவ., 6 வரை 7 ஆண்டுகள் அந்நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்தார். பின் 1982 நவ., 6ல் அதிபராக பதவியேற்ற இவர் இன்றும் தொடர்கிறார். 1975 முதல் இதுவரை தொடர்ந்து 46 ஆண்டுகளாக பதவி வகிக்கிறார். உலகில் இவருக்கு அடுத்து நீண்ட காலம் பதவியில் இருப்பவர் ஈக்வடோரியல் கினியா நாட்டின் அதிபர் டியோடோரோ ஒபியாங். இவர் 1979 ஆக., 3 முதல் பதவியில் இருக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X