சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஏன் இந்த அமைதி?

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஏன் இந்த அமைதி?'இது புது விதமான அரசியலாக இருக்கிறதே...' என, காங்கிரசிலிருந்து சமீபத்தில் திரிணமுல் காங்கிரசுக்கு தாவிய சுஷ்மிதா தேவ் பற்றிய முணுமுணுப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சுஷ்மிதா தேவ், காங்கிரசில் சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. என்ன

 அக்கம் பக்கம்


ஏன் இந்த அமைதி?



'இது புது விதமான அரசியலாக இருக்கிறதே...' என, காங்கிரசிலிருந்து சமீபத்தில் திரிணமுல் காங்கிரசுக்கு தாவிய சுஷ்மிதா தேவ் பற்றிய முணுமுணுப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சுஷ்மிதா தேவ், காங்கிரசில் சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது.
என்ன பிரச்னை நடந்ததோ தெரியவில்லை. சமீபத்தில் காங்கிரசுக்கு முழுக்கு போட்டு, மம்தாவின் திரிணமுல் கட்சியில் இணைந்தார். காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்களுக்கே சுஷ்மிதாவின் விலகல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'காங்கிரஸ் மேலிடம் பற்றி கடுமையாக விமர்சிப்பார். கட்சிக்குள் நடக்கும் உள்ளடி வேலைகளை அம்பலப்படுத்துவார்' என, அவர்கள் கூறினர். ஆனால், கட்சி மாறியதில் இருந்து காங்கிரஸ் பற்றியோ, சோனியா, ராகுல், பிரியங்கா பற்றியோ சுஷ்மிதா வாய் திறக்கவே இல்லை. பத்திரிகையாளர்கள் அது குறித்து கேட்டாலும், 'ஏற்கனவே இருந்த கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. அந்த கட்சி தலைவர்கள் மீது புழுதி வாரி துாற்றும் எண்ணமும் இல்லை' என,
திட்டவட்டமாக கூறினார். 'அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் சார்பாக பலமான அணி அமைவதற்கு காங்கிரசின் தயவு தேவை என மம்தா நினைக்கிறார். எனவே காங்கிரஸ் பற்றி வாய் திறக்க வேண்டாம் என, சுஷ்மிதாவுக்கு மம்தா கட்டளையிட்டிருப்பார். அதனால் தான் இந்த அமைதி' என்கின்றனர், மேற்கு வங்க அரசியல்வாதிகள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X