சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
'நீங்கள் தான் சில மாதங்களுக்கு முன், பொதுத்துறை நிறுவனங்களை விற்கலாம் என்றீர்கள்; இப்போது, 'உல்டா' வாக பல்டி அடிக்கிறீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை: பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகையில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என்பது பொருளாதார மூளையற்ற தன்மையை காட்டுகிறது. கடந்த 2016 முதல், நாட்டின் உள்நாட்டு

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்கள் தான் சில மாதங்களுக்கு முன், பொதுத்துறை நிறுவனங்களை விற்கலாம் என்றீர்கள்; இப்போது, 'உல்டா' வாக பல்டி அடிக்கிறீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை: பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகையில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என்பது பொருளாதார மூளையற்ற தன்மையை காட்டுகிறது. கடந்த 2016 முதல், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை மறுப்பதற்கு இல்லை.


'இப்பவே கண்ணை கட்டும்... என்ற நிலையிலிருக்கும் அ.தி.மு.க.,வினர், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு எப்படி தாக்குப் பிடிக்க போகின்றனரோ...' என, எண்ணத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேச்சு:
மக்களிடையே தி.மு.க., செல்வாக்கை இழந்து, அவப்பெயரை சம்பாதித்துள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றினால் இனிமேல் அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.


'இப்பவே கண்ணை கட்டும்... என்ற நிலையிலிருக்கும் அ.தி.மு.க.,வினர், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு எப்படி தாக்குப் பிடிக்க போகின்றனரோ...' என, எண்ணத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேச்சு:
மக்களிடையே தி.மு.க., செல்வாக்கை இழந்து, அவப்பெயரை சம்பாதித்துள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றினால் இனிமேல் அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.


'உங்களுக்கு தெரிந்த விஷயம், 'போஸ்டர்' தயாரித்தவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக சிறுபான்மையினர் நல கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
இந்திய வரலாற்று ஆராய்ச்சி பேரவை பொன் விழாவுக்காக வெளியிட்டுள்ள விளம்பர போஸ்டரில், சுதந்திரத்துக்காக 11 ஆண்டுகள் சிறையில் இருந்த நேரு, 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி., மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் இல்லை. ஆனால், பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்ட சாவர்க்கர் படம் உள்ளது.


'ராகுல் தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார் என்றால், பொதுமக்கள் விபரமாக பதிலளிக்க வேண்டாமா...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'பா.ஜ., வருமானம் உயர்ந்துள்ளது; உங்கள் வருமானம் உயர்ந்ததா?' என,- பொதுமக்களிடம் காங்., - எம்.பி., ராகுல் கேட்டுள்ளார். இதற்கு, 'காங்கிரஸ் தேய்ந்து அழிந்து கொண்டிருக்கிறது; நாங்கள் தேய்ந்து அழியவில்லை' என பொதுமக்கள் பதிலளித்தால் எப்படி இருக்கும்?


'நிறைய அ.தி.மு.க.,வினர் சோர்வடைந்து விட்டனர் போலிருக்கிறதே... போகிற போக்கை பார்த்தால், அ.தி.மு.க., வினரை அணை போட்டுத் தான் காப்பாற்ற வேண்டும் போலிருக்கிறதே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் அறிக்கை
: ஆட்சியை நாம் இழந்தாலும், வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எனவே யாரும் சோர்வடைய வேண்டாம். தி.மு.க.,வின் வெற்றி வெற்றியே இல்லை. இரண்டு கட்சிகளுக்கும் இடையே உள்ள ஓட்டு வித்தியாசம் 3 சதவீதம் தான்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X