சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அரசியல் பிரஷரில் அடிக்கடி மாறும் எஸ்.பி.,க்கள்!

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அரசியல் பிரஷரில் அடிக்கடி மாறும் எஸ்.பி.,க்கள்!''யாரை நொந்து என்ன புண்ணியம் போங்கோ...'' என்றபடியே பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா.''என்னன்னு விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''சேலம் மாவட்டம் இடைப்பாடி அரசு பஸ் 'டெப்போ'வுல இருந்து 75க்கும் மேற்பட்ட பஸ்களை, பல பகுதிகளுக்கும் இயக்கறா... இதுல, வேலை நேரம் கம்மி, அதிக வசூல் வர வழித்தடங்களும் இருக்கு

 டீ கடை பெஞ்ச்


அரசியல் பிரஷரில் அடிக்கடி மாறும் எஸ்.பி.,க்கள்!


''யாரை நொந்து என்ன புண்ணியம் போங்கோ...'' என்றபடியே பெஞ்சுக்கு வந்தார் குப்பண்ணா.

''என்னன்னு விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''சேலம் மாவட்டம் இடைப்பாடி அரசு பஸ் 'டெப்போ'வுல இருந்து 75க்கும் மேற்பட்ட பஸ்களை, பல பகுதிகளுக்கும் இயக்கறா... இதுல, வேலை நேரம் கம்மி, அதிக வசூல் வர வழித்
தடங்களும் இருக்கு ஓய்...

''இந்த பஸ்கள்ல பணி ஒதுக்கீடு கேக்கற டிரைவர், கண்டக்டர்களிடம், அ.தி.மு.க., ஆட்சியில, அந்தக் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள், 5,000த்துல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை வசூல்
பண்ணிண்டு, 'டூட்டி' போட்டு குடுத்தா...

''இப்ப ஆட்சி மாறிட்ட சூழல்ல, அதே வசூல் வேட்டையை, தி.மு.க., தொழிற்சங்கத்தினர் செஞ்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஆட்சி தான் மாறியிருக்கு... காட்சி மாறலைன்னு சொல்லும்...'' என்ற அண்ணாச்சியே, ''பொலீரோ ஜீப்பை, தள்ளிட்டு போயிட்டாருல்லா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''தீயணைப்புத் துறையில, போதிய மீட்பு பணி உபகரணங்கள் இல்லைன்னு அந்த துறையினர் ஏற்கனவே புலம்பிட்டு இருக்காவ...

''கொரோனா கிருமிநாசினி தெளிக்க, சென்னை, ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு ஒரு புல்லட் பைக், ஒரு பொலீரோ ஜீப்பை அரசாங்கம் குடுத்துச்சு வே...

''இப்ப, தீயணைப்பு துறை சார்புல கிருமி நாசினி அடிக்கிற பணியை நிறுத்திட்டதால, 'புல்லட் அங்கனயே இருக்கட்டும்... பொலீரோ இங்க வரட்டும்'னு சொல்லி, அதிகாரி ஒருத்தர், தன் ஆபீஸ் பயன்பாட்டுக்கு ஜீப்பை எடுத்துட்டு போயிட்டாரு வே...

''ஆவடி சுற்றுவட்டார பகுதி குடியிருப்புகள்ல அடிக்கடி பாம்புகள் புகுந்துடுது... அதை பிடிக்க தீயணைப்பு வீரர்கள், பெரிய தீயணைப்பு வாகனத்துல தான் போயிட்டு வராவ வே...

''குறுகிய சாலைகள்ல பெரிய வாகனங்கள்ல போக முடியாம, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுது... ஆனாலும், அதிகாரியிடம் பேசி வாகனத்தை வாங்க முடியாம தவிக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''வாரும் தனபால்... ஆத்துல தோப்பனார் சுகமா...'' என, பெஞ்சுக்கு வந்த நண்பரிடம் நலம் விசாரித்தார் குப்பண்ணா.உடனே, ''மொத்தம் மூணு எஸ்.பி.,யை மாத்திட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

''எந்த மாவட்டத்துல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''தி.மு.க., ஆட்சி வந்ததுமே, ராணிப்பேட்டை எஸ்.பி.,யா இருந்த சிவகுமாரை மாத்திட்டு, ஓம் பிரகாஷ் மீனாவை நியமிச்சாங்க... ரெண்டே மாசத்துல இவரையும் மாத்திட்டு, தேஷ்முக் சேகர் சஞ்சயை போட்டாங்க...

''அடுத்த ரெண்டே வாரத்துல, அவரையும் மாத்திட்டு, சென்னை ரயில்வே எஸ்.பி.,யா இருந்த தீபா சத்யாவை புது எஸ்.பி.,யா அறிவிச்சிருக்காங்க... புது எஸ்.பி.,யா வர்றவர், மாவட்டத்தை பத்தி முழுசா தெரிஞ்சுக்கவே, முழுசா மூணு மாசமாகிடும்...

''ராணிப்பேட்டை மாவட்டத்துல கொலை, கொள்ளை, வழிப்பறி, ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம்னு ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்குதுங்க...

''இதுல எஸ்.பி.,க்கள் நியாயமான முறையில நடவடிக்கை எடுத்ததால, அரசியல் பிரஷர்ல அவங்க மாற்றப்பட்டதா, போலீஸ் வட்டாரத்துலயே புலம்புறாங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.அரட்டை முடிய, நண்பர்கள் நகர்ந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
01-செப்-202100:11:49 IST Report Abuse
Anantharaman Srinivasan .S P.,க்கள் நியாயமான முறையில நடவடிக்கை எடுத்ததால, அரசியல் பிரஷர்ல அவங்க மாற்றப்பட்டதா, போலீஸ் வட்டாரத்துலயே புலம்புறாங்க...'' This message must reach C M ears.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
31-ஆக-202102:43:36 IST Report Abuse
BASKAR TETCHANA இந்த தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் போலீசாருக்கும் ஐ.எ.எஸ். ஐ பி எஸ் அதிகாரிகளுக்கும் சனி பிடித்து விட்டது. எனவே எல்லோரும் நேரம் கிடைக்கும் பொது திருநள்ளார் சென்று சனிபகவானை சென்று வணங்கி வேண்டி வந்தால் உங்கள் கழட்டும் தீரும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும். நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X