பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஆக., 31, 1896சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மேட்டுப்பாளையத்தில், 1896 ஆக., 31ம் தேதி பிறந்தவர் மே.வீ.வேணுகோபாலன். வறுமையின் காரணமாக, வேப்பேரியில் ஒரு அச்சகத்தில் அச்சுக்கோர்ப்பாளராக பணியாற்றிபடியே இரவுப்பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளி, புரசைவாக்கம் பாப்ரிஷியஸ் பள்ளி ஆகியவற்றில் தமிழாசிரியராக பணியாற்றினார். 'இறையனார் அகப்பொருள்,


இதே நாளில் அன்று


ஆக., 31, 1896



சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மேட்டுப்பாளையத்தில், 1896 ஆக., 31ம் தேதி பிறந்தவர் மே.வீ.வேணுகோபாலன். வறுமையின் காரணமாக, வேப்பேரியில் ஒரு அச்சகத்தில் அச்சுக்கோர்ப்பாளராக பணியாற்றிபடியே இரவுப்பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளி, புரசைவாக்கம் பாப்ரிஷியஸ் பள்ளி ஆகியவற்றில் தமிழாசிரியராக பணியாற்றினார். 'இறையனார் அகப்பொருள், வீரசோழியம், தஞ்சைவாணன் கோவை, அஷ்ட பிரபந்தம், நளவெண்பா' உட்பட ஏராளமான நுால்களை பதிப்பித்தார். 'அரிச்சந்திர புராணச் சுருக்கம்' உட்பட பல நுால்கள் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் இலக்கிய மற்றும் இலக்கண நுால் வெளியீடுகளின் தலைமை பதிப்பாசிரியராக பணியாற்றினார். சென்னை பல்கலை பேரகராதியின் திருத்த குழுவின் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார்.சமண சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மூன்று ஆண்டுகள் சீவக சிந்தாமணி குறித்து சொற்பொழிவு ஆற்றினார். 1985 பிப்., 4ம் தேதி தன் 89வது வயதில் காலமானார்.'தமிழ் இலக்கண தாத்தா' மே.வீ.வேணுகோபாலன் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X