'தாலிபான்களைப் பகைத்துக்கொண்டால் மீண்டும் செப்., 11 தாக்குதல்'; பாக்., அதிகாரி கருத்து?

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மோகித் யூசுப். இவர் சமீபத்தில் அமெரிக்காவின் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இதனை அடுத்து இவர் கூறிய கருத்து ஒன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சர்ச்சையாகி உள்ளது.அமெரிக்காவில் 2000ம் ஆண்டுக்குப் பின்னர் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற ட்வின் டவர் தற்கொலைப்படைத் தாக்குதல் உலகையே அச்சுறுத்தியது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மோகித் யூசுப். இவர் சமீபத்தில் அமெரிக்காவின் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இதனை அடுத்து இவர் கூறிய கருத்து ஒன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சர்ச்சையாகி உள்ளது.



latest tamil news




அமெரிக்காவில் 2000ம் ஆண்டுக்குப் பின்னர் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற ட்வின் டவர் தற்கொலைப்படைத் தாக்குதல் உலகையே அச்சுறுத்தியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் அல்கொய்தா இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்தியது.

இதற்கு மூளையாக செயல்பட்டவர் அப்போதைய அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன். இந்த தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் ஆன நிலையில் டைம்ஸ் இதழுக்கு யூசுப் பேட்டி அளித்தபோது ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்களை அங்கீகரிக்க விட்டால் இரண்டாவது முறையாக செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவில் நடைபெறும் என்று யூஸுஃப் கூறியதாக செய்தி வெளியானது.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரது இந்த கருத்து அமெரிக்காவை கொதிப்படையச் செய்தது. மேலும் சமூக வலைதளங்களில் இவரது கருத்து விவாதத்துக்கு உள்ளானது. பிரச்னை பெரிதானதை அறிந்துகொண்ட யூசுஃப் தான் அவ்வாறு கூறவில்லை என்றும் தனது கருத்து பத்திரிகையில் திரித்து வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியான இந்த கட்டுரையில் யூசுஃப் பேட்டி அளித்தபோது இவ்வாறு பேசினார்.


latest tamil news



'என்னுடைய வார்த்தைகளை குறித்துக்கொள்ளுங்கள். 1990களில் நடந்தது போலவே மீண்டும் ஆப்கானிஸ்தான் புறக்கணிக்கப்பட்டால் விளைவுகள் அப்போது இருந்தது போலவே இப்போதும் கடுமையாக இருக்கும். பாகிஸ்தான் மற்றும் மேலை நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகும்'.இவ்வாறு யூசுப் டைம்ஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலமாக மீண்டும் ஒருமுறை செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெறும் என்று அவர் நேரடியாகக் கூறவில்லை. ஆனால் அவர் மறைமுகமாக அதுபோன்ற தாக்குதல் ஒன்று நடைபெறும் என்று கூறினார் என பலரால் விவாதிக்கப்பட்டது. இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
05-செப்-202109:53:27 IST Report Abuse
sankar பண்ணிப்பாரு - அப்புறம் பாகிஸ்தானும் இருக்காது - ஆப்கானும் இருக்காது
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
02-செப்-202112:28:32 IST Report Abuse
jayvee கோட் சூட் போட்டு தாடியை மழித்தாலும் ம(த)னம் அதைத்தானே சொல்லும்
Rate this:
Cancel
Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா
01-செப்-202110:45:16 IST Report Abuse
Thamarai Moorthy.C.V. வளர்த்தகடா மார்பில் பாயும், அமெரிக்கா வாழத்தான் தலிபான் முட்டினான், மீண்டும் முட்டுவான், அவன் தாங்கும் வலிமை அமெரிக்காவுக்கு உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X