பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் 80 பேர் 'அட்மிட்'

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஈரோடு: கொரோனா அகுறிகளுடன், ஈரோடு அரசு மருத்துவமனையில், அதிகளவில் மக்கள் சேர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஈரோட்டில் செயல்படுகிறது. இங்கு கொரோனா நோயாளிகளுக்காக தனி சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 200 படுக்கை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தாக்கம் குறைந்திருந்த நிலையில், சில நாட்களாக மீண்டும்

ஈரோடு: கொரோனா அகுறிகளுடன், ஈரோடு அரசு மருத்துவமனையில், அதிகளவில் மக்கள் சேர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஈரோட்டில் செயல்படுகிறது. இங்கு கொரோனா நோயாளிகளுக்காக தனி சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 200 படுக்கை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தாக்கம் குறைந்திருந்த நிலையில், சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. சளி, காய்ச்சல், இருமல் என கொரோனா அறிகுறிகளுடன், அரசு மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, கொரோனா அறிகுறிகளுடன், 80 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நோயாளிகள், அவர்களுடன் வருவோர் வந்து செல்வதற்கு, அரசு மருத்துவமனையில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்திலும் பல்வேறு கட்டுபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சத்தமின்றி கொரோனா பரவல், மீண்டும் வேகமெடுக்க துவங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X