பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,1ல் பள்ளி, கல்லூரி திறப்பால் கொரோனா நோயாளிகள் இடமாற்றம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோபி: பள்ளி மற்றும் கல்லூரி திறப்பால், கோபியில் செயல்பட்ட இரு கொரோனா மையங்களில் இருந்த நோயாளிகள், இடமாற்றம் செய்யப்பட்டனர்.கோபி தாலுகாவில் கொரோனா தொற்று பாதித்தோருக்கு, கோபி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதியில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. செப்.,1 முதல் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்படவுள்ளது. இதனால் கொரோனா மையமாக

கோபி: பள்ளி மற்றும் கல்லூரி திறப்பால், கோபியில் செயல்பட்ட இரு கொரோனா மையங்களில் இருந்த நோயாளிகள், இடமாற்றம் செய்யப்பட்டனர்.


கோபி தாலுகாவில் கொரோனா தொற்று பாதித்தோருக்கு, கோபி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதியில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. செப்.,1 முதல் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்படவுள்ளது. இதனால் கொரோனா மையமாக செயல்படும், பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்களை காலி செய்ய, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி விடுதி மையத்தில் தங்கியிருந்த, 37 பேரில், ?? பேர் கோபி அரசு மருத்துவமனைக்கும், மற்றவர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கும் நேற்று முன்தினம் இரவு இடம் மாற்றப்பட்டனர். கோபி கலை அறிவியல் கல்லூரி மையத்தில் தங்கியிருந்த, 49 கொரோனா நோயாளிகளும், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வரும் நாட்களில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாவோர், கோபி அல்லது ஈரோடு அரசு மருத்துவனையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X