பஸ் ஸ்டாண்ட் சாலையை ஆக்கிரமித்து கடைகள்: டிரைவர்கள், வாகன ஓட்டிகள் தவிப்பு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையை ஆக்கிரமித்து, காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பஸ் டிரைவர்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, தினசரி காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு, 100 க்கும் மேற்பட்ட கடைகளில் சிறு குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மொத்தமாக, சில்லரையாக வியாபாரம்

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையை ஆக்கிரமித்து, காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பஸ் டிரைவர்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.


புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, தினசரி காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு, 100 க்கும் மேற்பட்ட கடைகளில் சிறு குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மொத்தமாக, சில்லரையாக வியாபாரம் செய்கின்றனர். இதில் பலர் மார்க்கெட் நுழைவு வாயிலில், பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையை ஆக்கிரமித்து, 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை அமைத்துள்ளனர். ஒரு சிலர் கூடாரமும் அமைத்து விட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறும் நிலை உள்ளது. காய்கறி வாங்க வருவோர், மக்கள் போக்குவரத்து இடையூறால் பாதிக்கப்படுகின்றனர். சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் வாய் தகராறு, வாக்குவாதம் ஏற்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர கடைகளை அகற்றி, மார்க்கெட்டுக்குள் வைத்து வியாபாரம் செய்ய, நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X