தொட்டி இருக்கு; தண்ணீர் இல்லை: ஜி.ஹெச்.,ல் தொடரும் ஏமாற்றம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை தொட்டியில், பல ஆண்டுகளாக குடிநீர் நிரப்பப்படாததால், மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், போலீஸ் ஸ்டேஷன் எதிரே, மாநகராட்சி மூன்றாவது மண்டலம் சார்பில், 750 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டி வைக்கப்பட்டது. இதனால் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதாக நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் எண்ணினர். ஆனால்

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை தொட்டியில், பல ஆண்டுகளாக குடிநீர் நிரப்பப்படாததால், மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், போலீஸ் ஸ்டேஷன் எதிரே, மாநகராட்சி மூன்றாவது மண்டலம் சார்பில், 750 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டி வைக்கப்பட்டது. இதனால் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதாக நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் எண்ணினர். ஆனால் தொட்டியால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்னை உள்ளது. ஆனால், தொட்டி வைத்தும், இதுவரை குடிநீர் வினியோகம் செய்யவில்லை. வீணாகி வரும் தொட்டியில், குடிநீரை நிரப்பி வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X