சமூக விரோத செயல்களின் கூடாரமான சத்துணவு மையம்| Dinamalar

சமூக விரோத செயல்களின் கூடாரமான சத்துணவு மையம்

Added : ஆக 30, 2021
Share
ஈரோடு: ஈரோட்டில் சமூக விரோத செயல்களின் கூடாரமாக, சத்துணவு மையம் மாறி வருகிறது. ஈரோடு, நரிபள்ளம், அம்பேத்கர் நகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளி சத்துணவு மையம் அருகில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மையத்தை சுற்றி முள், செடி, கொடி படர்ந்து காணப்படுகிறது. சுற்றுச்சுவரும் இல்லாததால், சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி

ஈரோடு: ஈரோட்டில் சமூக விரோத செயல்களின் கூடாரமாக, சத்துணவு மையம் மாறி வருகிறது. ஈரோடு, நரிபள்ளம், அம்பேத்கர் நகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளி சத்துணவு மையம் அருகில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மையத்தை சுற்றி முள், செடி, கொடி படர்ந்து காணப்படுகிறது. சுற்றுச்சுவரும் இல்லாததால், சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வருகிறது. சீட்டாட்டம், வெட்டாட்டம் மட்டுமின்றி இரவில் தகாத சம்பவங்களும் நடக்கிறது. குடிமகன்கள் இரவு நேரங்களில் பாராக மாற்றிவிட்டனர். இங்குள்ள கழிவறையில் குடிமகன்கள் வீசி எறிந்த பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்துள்ளன. நடுநிலைப்பள்ளிகளும் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் சத்துணவு மையம், சமூக விரோத செயல்களின் கூடாரமாகி வருவது, அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X