பூலாம்பட்டியில் குவிந்த மக்கள்: விசைப்படகில் உற்சாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூலாம்பட்டியில் குவிந்த மக்கள்: விசைப்படகில் உற்சாகம்

Added : ஆக 30, 2021
Share
இடைப்பாடி: பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, அக்கரையில் உள்ள நெருஞ்சிப்பேட்டைக்கு செல்ல, விசைப்படகு போக்குவரத்து ஊரடங்கில் தளர்வால், கடந்த ஜூலை, 5 முதல் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், போதிய கூட்டம் இல்லை. இந்நிலையில் நேற்று ஏராளமானோர் நெருஞ்சிப்பேட்டைக்கு சென்றனர். அதேநேரம், விசைப்படகு மூலம் காவிரி ஆற்றில்

இடைப்பாடி: பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, அக்கரையில் உள்ள நெருஞ்சிப்பேட்டைக்கு செல்ல, விசைப்படகு போக்குவரத்து ஊரடங்கில் தளர்வால், கடந்த ஜூலை, 5 முதல் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், போதிய கூட்டம் இல்லை. இந்நிலையில் நேற்று ஏராளமானோர் நெருஞ்சிப்பேட்டைக்கு சென்றனர். அதேநேரம், விசைப்படகு மூலம் காவிரி ஆற்றில் சுற்றுலா சென்று பலர் உற்சாகம் அடைந்தனர். இதனால், மக்கள் கூட்டம் களைகட்டியது.


3,756 பேர் ரசிப்பு: கொரோனாவால் சனி, ஞாயிறில் கோவில்கள் மூடப்பட்ட நிலையிலும், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று, மேட்டூர் அணை பூங்காவை, 3,756 பேர் ரசித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X