பொது செய்தி

இந்தியா

ரூ.14 ஆயிரம் கோடிக்கு ஏவுகணை கொள்முதல்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு புதிய ஊக்கம் அளிக்கும் விதமாக நம் ராணுவத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'ஆகாஷ் எஸ்' ஏவுகணைகள் மற்றும் 25 அதிநவீன 'துருவ் மார்க் - 3' இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.லடாக் போன்ற குளிர் நிறைந்த பகுதிகளில் கூட 25 - 30 கி.மீ., தொலைவுக்கு எதிரிகளின் இலக்கை துல்லியமாக சென்று தாக்க கூடிய 'ஆகாஷ்
ரூ.14 ஆயிரம் கோடி,  ஏவுகணை, கொள்முதல்

புதுடில்லி : 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு புதிய ஊக்கம் அளிக்கும் விதமாக நம் ராணுவத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'ஆகாஷ் எஸ்' ஏவுகணைகள் மற்றும் 25 அதிநவீன 'துருவ் மார்க் - 3' இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

லடாக் போன்ற குளிர் நிறைந்த பகுதிகளில் கூட 25 - 30 கி.மீ., தொலைவுக்கு எதிரிகளின் இலக்கை துல்லியமாக சென்று தாக்க கூடிய 'ஆகாஷ் எஸ்' ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.மேலும் 'துருவ் மார்க் - 3' என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



இந்நிலையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணை மற்றும் 25 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலை கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திமுக நாட்டிற்கு கெடு உலக நாட்டை ஆண்ட இராஜ இராஜ சோழர் சமாதி சாதாரன தட்டியில் நான்கு கம்புகளில் ஆனால் தமிழ்நாட்டை கொல்லை அடித்தவருக்கு 38கோடியில் மண்டபம் தமிழகத்தில் அதுக்கு அரசாங்க பணமா கிடைத்தது மேலும் மணல் சிமெண்ட் சல்லி அதிக விலை தமிழகத்தில் பசி பட்னி வீடு இல்லாம கூட இருக்கிறார்கள் அனைத்துக்கும் காரணம் திமுக முட்டால் மக்கள் இருக்கும் வரை திமுக. தலைவிரித்து ஆடும்
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
31-ஆக-202100:59:46 IST Report Abuse
elakkumanan இதுக்கெல்லாம் காசு வருது.......ஒரு ரெண்டாயிரம் ரூவாய் ரேஷனில் பிச்சையா கொடுக்கலாம் ல மோடி சார்....ஏதோ, டாஸ்மாக் மூலமா, நாலஞ்சு ஏழை முதலாளிகளுக்கும் கொஞ்சமா வரிக்காசாக அரசுக்கும் கொடுத்து இந்த மாநில பிழைப்புக்கு உதவுங்க மோடி சார்...நாங்க எல்லாத்துலயும் கடன் வாங்குபோவோம்.....கமிஷன் அடிப்போம்...நீங்க, நாட்டை காப்பாற்ற ஏவுகணை வாங்கினா, அது செலவு............நாற்பது கோடிக்கு திருடி மாட்டாத சாமர்த்தியசாலிக்கு சிலை வைத்தால், அது கடமை.............எங்க காரக்டரையே புரிஞ்சுக்க மாற்றீங்க மோடி சார்......ஓசி தான் உசுரு.....வளர்ந்த மாநிலம் , வளர்ந்த மாநிலம் னு சொல்லுவோம்.....ஆனால், ரேஷனில் காசு க்கு வரிசையில் நிற்போம்...அறிவு பயங்கரமா வளந்திருக்கு ன்னு கூவுவோம்...போட்டி தேர்வு எழுத்தமாட்டோம்....திருடர் மற்றும் ஜாமீன் கும்பலுக்கு ஒட்டு விற்போம்... இதெல்லாம் இனமான குணம் சார்............ஏதாவது பிச்சை போடுங்க சார்....இது பிச்சை அரசு சார்......திராவிடம் நா சும்மாவா.
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
31-ஆக-202100:34:08 IST Report Abuse
Venkatakrishnan ... மேக் இன் இந்தியான்றது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலேயே தங்களோட பொருட்களைத் தயாரிக்கக் கொண்டு வந்த ஒரு கொள்கை. அதனால வேலைவாய்ப்பும், தொழில்நுட்பமும் பெருகும்ன்றதுதான் இலக்கு... அத விட்டுட்டு நாட்டோட பாதுகாப்புக்கு ஒன்றிய அரசாங்கம் குண்டு தயாரிக்கிறது எப்படி மேக் இன் இந்தியா ஆகும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X