பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு, பல்வேறு திட்டங்களில் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் மாணவ, மாணவியருக்கு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு, பல்வேறு திட்டங்களில் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தில், எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற படிப்புக்களுக்கு மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை கேட்கும் விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, புதுப்பித்து செப்., 30க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை நவ.,5க்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு, ஆதார் எண் விபரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் வரும் வரும் அக்.,15 முதல் செயல்பட துவங்கும். புதிய விண்ணப்பங்களுக்கான இணையதளம் நவ., 16 முதல் செயல்பட துவங்கும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X