பொது செய்தி

இந்தியா

அதிகாரி சர்ச்சை: 'முட்டு' கொடுக்கும் முதல்வர்

Updated : செப் 01, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி உத்தரவிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆதரவளிப்பது போல் கருத்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் சமீபத்தில்
 அதிகாரி ,சர்ச்சை முட்டு , முதல்வர்

புதுடில்லி :போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி உத்தரவிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆதரவளிப்பது போல் கருத்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நடவடிக்கை

அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில், போராட்டம் நடத்திய விவசாயிகளின் மண்டையை அடித்து உடைக்கும்படி கர்னல் மாவட்ட உதவி கலெக்டர் ஆயுஷ் சின்ஹா, போலீசாருக்கு உத்தரவிடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து உதவி கலெக்டருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.இது குறித்து, ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் கூறி உள்ளதாவது:உதவி கலெக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், முதலில் நடந்த சம்பவத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து டி.ஜி.பி., விசாரித்து வருகிறார்.
வேறு வழியில்லைஉதவி கலெக்டர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானதாக இருந்தாலும், மாநில சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட கடுமையாக நடந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.உதவி கலெக்டருக்கு ஆதரவாக முதல்வர் கூறியுள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


'ஆட்சியில் நீடிக்க உரிமையில்லை

'விவசாயிகள் மீதான தடியடி சம்பவம் குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா' வில் நேற்று எழுதப்பட்டிருந்த கட்டுரை: ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் இருப்பது ஏன்?ஒருபுறம் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மறுபுறம் ஹரியானாவில் இரண்டாவது ஜாலியன்வாலா பாக் சம்பவம் அரங்கேறி வருகிறது. இனி கட்டாரின் அரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabu.KTK - Coimbatore,இந்தியா
31-ஆக-202111:19:12 IST Report Abuse
Prabu.KTK இதில் கருத்து சொல்ல சிவசேனா யார்? இது நடப்பது ஹரியானாவில். சிவசேனா இருப்பது மஹாராஷ்டிராவில். பிஜேபி எதிர்ப்பு மட்டுமே கொள்கையாக கொண்ட ஒரு கட்சி. ஒரு காலத்தில் மராட்டிய சிங்கம் பால தாக்கரே தலைவனாக இருந்த ஒரு கட்சி. பரிதாபம் . ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
31-ஆக-202109:24:48 IST Report Abuse
பேசும் தமிழன் ஏம்பா இங்கு முதல்வர் வரும்போது.. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால்.. தமிழக பொலிஸ் சும்மா கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா?
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
31-ஆக-202107:40:22 IST Report Abuse
a natanasabapathy அரசியல் கட்சிகள் தங்களது சுய லாபத்துக்காக துரோகிகளை ஆதரிக்கின்றனர். சகல சவுகரியங்களையும் உண்டாக்கி தினமும் மூன்று வேலை உண்டு கொழுத்து வாழ்பவன் விவசாயி இல்லை இரண்டு மாநிலங்களில் மட்டுமே போராட்டம் நடக்கிறது விவசாயம் செய்பவன் 18 மாதங்களாக விவசாயத்தை புறக்கணிக்க மாட்டான் போராடுபவன் அந்நிய கைக்கூலிகள் ஆதரிப்பவன் அரசியல் கொள்ளையர்கள்
Rate this:
E. RAJAVELU - Chennai,இந்தியா
31-ஆக-202117:28:07 IST Report Abuse
E. RAJAVELU...உண்மை தெரியாமல் உளறாதே....
Rate this:
enkeyem - sathy,இந்தியா
31-ஆக-202120:06:22 IST Report Abuse
enkeyemஅந்த புரோக்கர்கள் விவசாயிகள் இல்லை என்பது உமக்கு வேண்டுமானால் இனிக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X