பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் குடியிருப்பில் இறங்கிய ஹெலிகாப்டர்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கம் ஓட்டிய கட்டிகானப்பள்ளி பஞ்.,த்துக்கு உட்பட்டது ஜமீல்சிட்டி குடியிருப்பு. நேற்று மதியம், 1:30 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று அங்குள்ள காலியிடத்தில் தரை இறங்கியது. இதனால், அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். தகவலின்படி கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் எஸ்.ஐ.,க்கள் விரைந்து சென்றனர். விசாரணையில், பெங்களூருவில்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கம் ஓட்டிய கட்டிகானப்பள்ளி பஞ்.,த்துக்கு உட்பட்டது ஜமீல்சிட்டி குடியிருப்பு. நேற்று மதியம், 1:30 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று அங்குள்ள காலியிடத்தில் தரை இறங்கியது. இதனால், அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். தகவலின்படி கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் எஸ்.ஐ.,க்கள் விரைந்து சென்றனர். விசாரணையில், பெங்களூருவில் இந்துஸ்தான் கோல்டு என்ற பெயரில் தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் மவுலா ஷெரீப் என்பவர், கிருஷ்ணகிரியிலுள்ள தன் உறவினருக்கு பிறந்த குழந்தையை பார்க்க பெங்களூரு, ஜக்கூரில் உள்ள தும்பி ஏவியேசன் நிறுவனத்தில், ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து வந்ததும், அதற்கு அனுமதியை முறையாக பெற்றதும் தெரிந்தது. மாலை, 5:10 மணியளவில் கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X