ரூ.42 கோடியில் ரிங்ரோடு விரிவாக்கப்பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.42 கோடியில் ரிங்ரோடு விரிவாக்கப்பணி தீவிரம்

Added : ஆக 30, 2021
Share
ஓசூர்: ஓசூர், சீத்தாராம் மேடு தேசிய நெடுஞ்சாலையையொட்டி துவங்கி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில், 6 கி.மீ., தூரத்திற்கு ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடந்த, 2014 முதல் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தளி பகுதிகளில் இருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூரு செல்லும் மக்கள், ஓசூர் நகருக்குள் நுழையாமல்

ஓசூர்: ஓசூர், சீத்தாராம் மேடு தேசிய நெடுஞ்சாலையையொட்டி துவங்கி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில், 6 கி.மீ., தூரத்திற்கு ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடந்த, 2014 முதல் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தளி பகுதிகளில் இருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூரு செல்லும் மக்கள், ஓசூர் நகருக்குள் நுழையாமல் செல்ல முடியும். ரிங்ரோடு முதலில் இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டதால், வாகன போக்குவரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை. இதை மனதில் வைத்து, சீத்தாராம் மேட்டிலிருந்து, தளி ரயில்வே கேட் வரை, 3 கி.மீ., தூரத்திற்கு, 42 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கபணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக, சீத்தாராம் மேட்டிலுள்ள மலையை உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தளி ரயில்வே கேட் அருகே மற்றும் சீத்தாராம் மேடு அருகே, நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள இடங்களில், சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்த, 3 கி.மீ., தூர பணி முடிந்தவுடன், தளி ரயில்வே கேட்டில் துவங்கி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை வரை, 3 கி.மீ., தூரத்திற்கு, விரிவாக்க பணி துவங்க வாய்ப்புள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X