பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஓசூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தேன்கனிக்கோட்டை வட்டகிளை மாநாடு நடந்தது. வட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் கல்யாணசுந்தரம் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், மகளிருக்கு தனியாக பஸ் இயக்க வேண்டும். தேன்கனிக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கருணை

ஓசூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தேன்கனிக்கோட்டை வட்டகிளை மாநாடு நடந்தது. வட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் கல்யாணசுந்தரம் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், மகளிருக்கு தனியாக பஸ் இயக்க வேண்டும். தேன்கனிக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை, காலதாமதமின்றி வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், ஊர்புற நூலகர்கள், சுகாதாரத்துறை தற்காலிக ஊழியர்கள், கணினி இயக்குனர் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு, 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பன உட்பட, 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X