பொது செய்தி

தமிழ்நாடு

அயோத்தி ராமர் கோவில் செல்லும் புனித நீர் கிருஷ்ணகிரி வருகை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: அயோத்தி ராமர் கோவில் செல்லும் புனித நீர், மக்களின் வழிபாட்டுக்கு கிருஷ்ணகிரி வந்தது. காஞ்சிபுரம் சங்கரமடம் மற்றும் சிருங்கேரி சங்கரமடம் இணைந்து, பாரதத்தின், 16 புண்ணிய நதிகளில் இருந்து, புனித தீர்த்தம் மற்றும் புனித மண்ணை, நாடு முழுவதும், ஒரு கோடி மக்களிடம் கொண்டு சென்று வழிபாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். காஞ்சிபுரம் சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி

கிருஷ்ணகிரி: அயோத்தி ராமர் கோவில் செல்லும் புனித நீர், மக்களின் வழிபாட்டுக்கு கிருஷ்ணகிரி வந்தது. காஞ்சிபுரம் சங்கரமடம் மற்றும் சிருங்கேரி சங்கரமடம் இணைந்து, பாரதத்தின், 16 புண்ணிய நதிகளில் இருந்து, புனித தீர்த்தம் மற்றும் புனித மண்ணை, நாடு முழுவதும், ஒரு கோடி மக்களிடம் கொண்டு சென்று வழிபாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். காஞ்சிபுரம் சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யாத்திரையை கடந்த, 9ல் துவக்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் புனித நீர் மற்றும் மண்ணை கொண்டு செல்ல உள்ளனர். இந்த புனித யாத்திரை வாகனம், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ரவுண்டானாவில் துவங்கி, பழையபேட்டை, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் வலம் வந்தது. நேற்று காலை கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவிலில் இருந்து துவங்கி, நகர் முழுவதும் சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X