எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு கடிவாளம் முதல்வரிடம் எதிர்பார்ப்பு

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: எம்.எல்.ஏ.,க்களை தொடர்ந்து, சட்டசபையில் தன்னை புகழ்ந்து பேசும் அமைச்சர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் கடிவாளம் போட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.சட்டசபையில், துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. விவாதத்திற்கு பின், தங்கள் துறையில் செயல்படுத்தவுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை, அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.கொரோனா காலம்
அமைச்சர்கள், கடிவாளம், முதல்வர் ,எதிர்பார்ப்பு

சென்னை: எம்.எல்.ஏ.,க்களை தொடர்ந்து, சட்டசபையில் தன்னை புகழ்ந்து பேசும் அமைச்சர்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் கடிவாளம் போட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

சட்டசபையில், துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. விவாதத்திற்கு பின், தங்கள் துறையில் செயல்படுத்தவுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை, அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
கொரோனா காலம் என்பதால், கூட்டத்தை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி எம்.எல்.ஏ.,க்கள், 10 நிமிடம் முதல், 15 நிமிடம் வரை பேச அனுமதிக்கப் படுகின்றனர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் ஸ்டாலினையும், அவரது மகன் உதயநிதியையும் புகழ்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். தன்னை புகழ்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்வர் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, புகழுரையை எம்.எல்.ஏ.,க்கள் குறைத்தனர். அதே நேரத்தில் முதல்வரையும், உதயநிதியையும் புகழ்வதை, அமைச்சர்கள் குறைக்கவில்லை. கடந்த சனிக்கிழமை பதிலுரை வழங்கிய அமைச்சர்கள் அதிகபட்சமாக, 10 முதல் 15 நிமிடங்கள், முதல்வரை புகழ்ந்து தள்ளினர்.

இதைத் தொடர்ந்து, துறையை பற்றி பேசும்போது, அவ்வப்போது இடைச்செருகலாகவும் முதல்வரை புகழ்ந்தனர். மீண்டும் இறுதியுரையிலும் முதல்வரை புகழ்ந்தனர். எம்.எல்.ஏ.,க்களை எச்சரித்தது போன்று, அமைச்சர்களுக்கும் முதல்வர் கடிவாளம் போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சட்டசபையில் எப்படி செயல்பட வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்களுக்கு சமீபத்தில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. சபை மரபை பின்பற்றுவது குறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31-ஆக-202117:36:07 IST Report Abuse
Natarajan Ramanathan முதல் முறையாக உறுப்பினர் ஆகியுள்ள உதைநிதி இருக்கையை ஏன் முதல்வர் பின்னால் அதுவும் எப்போது டிவி கேமராவில் படம்பிடித்தாலும் தவறாது தெரியும் வண்ணம் அமைக்கவேண்டும்?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
31-ஆக-202115:55:44 IST Report Abuse
Mohan பெண் போலீஸ் தான் நிக்கணும்னு சொல்லிருக்கார் .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஆக-202110:49:59 IST Report Abuse
duruvasar நேற்று சட்டசபையில் பொய்யாமொழி, நாசர் அமைச்சர்களிடையேயானா இந்தத் சரித்திரம் படைக்கும் போட்டியில் காவிய நாயகன் உதயநிதிக்கு செங்கல்பதிகாரம் பாமாலை இயற்றி நாசர் அய்யா முதல் பரிசை தட்டி சென்றுவிட்டார். ஆனால் பொதுவாக கூட்டத்தில் இருப்பவர்களை மகிழ்விக்க பேசுவது மட்டும்தான் அவரது வழக்கம் என அவரே தெளிவுபடுத்தியிருக்கிறார். எனவே உளமாற உணர்ச்சிவசப்பட பேசிய அன்பில் பொய்யாமொழி அய்யாதத்தான் மக்களின் தேர்வு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X