பொது செய்தி

தமிழ்நாடு

நாளை பள்ளிகள் திறப்பு: 6473 பேருக்கு தடுப்பூசி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 அரசு, 49 அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகள், 78 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 264 பள்ளிகள் உள்ளன. இங்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகளில் 31,952 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர் 6822 பேர் பணிபுரிகின்றனர். பள்ளி திறப்பிற்கு முன்பாக அனைவருக்கும் தடுப்பூசி 11 இடங்களில் செலுத்த சிறப்பு முகாம் நடக்கிறது. இதுவரை ஆசிரியர்கள், பணியாளர்கள் 6473

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 அரசு, 49 அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகள், 78 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 264 பள்ளிகள் உள்ளன. இங்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகளில் 31,952 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர் 6822 பேர் பணிபுரிகின்றனர். பள்ளி திறப்பிற்கு முன்பாக அனைவருக்கும் தடுப்பூசி 11 இடங்களில் செலுத்த சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுவரை ஆசிரியர்கள், பணியாளர்கள் 6473 பேர் முதல் டோஸ், இரண்டு டோஸ் 3937 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 349பேர் தடுப்பூசி செலுத்தவில்லை. உடல்நலப்பிரச்னைகளால் சிலர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். மாவட்டத்தில் 96 சதவீத ஆசிரியர்கள், அலுவலர்கள்தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறை பின்பற்றி நாளை (செப்.1) பள்ளி வகுப்பறையை பயன்படுத்தும் வகையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X